vetri"8 தோட்டாக்கள்' மூலம் நாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டைப் பெற்று, "ஜீவி' படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர் நடிகர் வெற்றி. தற்போது ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Advertisment

நம்மிடம் வெற்றி பேசும்போது """கேர் ஆஃப் காதல்', படம் "கேர் ஆப் கச்சிராப்பலம்' என்ற தெலுங்குப் படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. "இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் "தாடி'. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

தற்போது, குரு ராமானுஜம் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. பல கதைகள் கேட்டு அவற்றில் ஐந்து கதைகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இதன்பிறகு சொந்த தயாரிப்பில் ஈடுபடுவேன்.

"8 தோட்டாக்கள்' படத்தை பார்த்து ரஜினி சார், "ஜீவி' படத்தைப் பார்த்து விவேக் சார் பாராட்டினார்கள். இரண்டுமே மறக்க முடியாத பாராட்டுகள். எனக்கு ரோல் மாடல் என்று யாருமில்லை. எனக்குள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத் தோடு நடித்து வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு சிறப்பானதாக இருக்கும்'' என்றார் உற்சாகமுடன்.