Advertisment

முதல் படம் அல்ல, முதல் கோபம்!

/idhalgal/cinikkuttu/first-film-not-first-anger

யக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் "பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் முதல் பாடல் "கருப்பி என் கருப்பி' வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை ப

யக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் "பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் முதல் பாடல் "கருப்பி என் கருப்பி' வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள கருப்பி பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

Advertisment

firstfilm

இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம்:

மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல முதல் கோபம்னுகூட சொல்லலாம். அவனுடைய இயலாமை, அவனுடைய ஆற்றாமை, அவனுக்குள்ள இருக்கிற ரௌத்திரம், உன்மத்தம், வெறி, எரிச்சல், வரலாற்றின்மீது இருந்த தீராத கோபம் இது எல்லாத்தோட மொத்த வெளிப்பாடா இந்தப் பாட்டு இருக்கு.

"பரியேறும் பெருமாள்' கதைக்குள்ள இருக்கிற மொத்த உணர்ச்சியும் இந்தப்பாட்டுல இருக்கிறதா நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சியில இருந்த கோபத்தை சந்தோஷ் நாராயணன் அவர் குரலிலிலும் இசையிலும் மிகச்சிறப்பா கொண்டுவந்திருக்கார்.

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து:

கருப்பி பாடலில் வெளிப்படையாக ஒலிலிக்கும் வலிலியும் அடிநாதமாக கேட்கும் விடுதலை உணர்வும் மெய்சிலிலிர்க்கச் செய்கிறது. வாழ்த்துகள்.

"மூடர் கூடம்' இயக்குநர் நவீன்:

உள்ளுக்குள் புதைந்து கிடந்த வலியை ஒரு பாட்டாக மாற்றியிருக்கிறார்கள். "கருப்பி என் கருப்பி' என் மொத்த கவனத்தையும் திருடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி:

கருப்பி பாட்டு ரொம்ப தனித்துவமா இருக்கு. இசை, வரிகள், பாடலிலில் வரும் காட்சிகள் எல்லாம் ரொம்ப உயிரோட்டமா இருக்கு.

பாடலாசிரியர் முருகன் மந்திரம்:

ஒரு படைப்பு அல்லது பாடல் சாதாரணமாக கடந்து போகக்கூடாது. கேட்கிறவங்களோட சிந்தனையை மாற்றணும். யோசிக்க வைக்கணும். கருப்பி பாடல் வரிகள் நிச்சயமா கேட்கிறவங் களோட சிந்தனைக்குள்ள போய் பேசும். ஒரு உயிரை இழந்த துயரத்தின் உரையாடலாக அமைந்திருக் கிற கருப்பி பாடலை சாதாரணமாக எவராலும் கடந்து போக முடியாது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe