காமன்மேன் பிரசன்ஸ் பி. கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் "ஐயங்கரன்.' "ஈட்டி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இதில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். வெளியான சிறிது நேரத்தில் சமூக வலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரைப் பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தற்போது இந்த டீசரை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
குறிப்பாக, இந்த டீசரில் இடம் பெறும் ""ஓடாத விழுந்துடுவனு சொல்லுறதுக்கு இங்கு ஆயிரம்பேர் இருக்காங்க. ஆனா விழுந்துடாம ஓடுன்னு சொல்லுறதுக்கு இங்கு யாருமே இல்ல...'' என்ற வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவு- சரவணன் அபிமன்யு, எடிட்டிங்- ஏ.எம். ராஜா முகமது, கலை- ஏ. துரைராஜ், பாடல்கள்- ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடனம்- ராஜு சுந்தரம், ஷோபி ஆக்ஷன்- ராஜசேகர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/manjuma-t.jpg)