னுஷுடன் ஜோடிபோட்டு ஆண்ட்ரியா நடித்த "வட சென்னை' படம் 2018 டிசம்பரில் ரிலீசானது.

Advertisment

andrea

அதன்பின் பல மாதங்கள் எந்தப் படமும் ஆண்ட்ரியாவுக்கு கமிட்டாக வில்லை. 2019 ஏப்ரலில் "கா' என்ற படத்தில் கமிட்டாகி பூஜையும் போடப் பட்டது. அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் சென்று ஃபோட்டோ எடுக்கும் சாகச வீராங்கனையாக இந்தப் படத்தில் வருவார். அதே ஏப்ரலில் "மாளிகை' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது.

இதற்குப்பின் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளாமல், மனஅழுத்தத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று, இப்போது ஃப்ரஷ்ஷாக திரும்பியுள்ளார் ஆண்ட்ரியா.

"கா' முதலில் வருமா அல்லது "ஃபர்ஸ்ட் லுக்' வெளியாகி, ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட "மாளிகை' முதலில் வருமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஆண்ட்ரியா.