இந்திய சமூகத்தில் மலிந்துகிடக்கிற காதலில்லாத திருமணங்களின் ஊடே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றியதோர்
திரைப்படம் "தடயம்.' ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந் தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை, அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான்.
அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது.
காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப் பாக, தாளா பரவசங்களின் காட்சிப் படிமங்களாக மாற்றித் தந்திருக்கும் திரைப்படம்தான் "தடயம்.'
இத்திரைப்படத்தை, தமிழ் இலக் கிய உலகில் நன்கு அறியப்பட்டவ ரான தமயந்தி எழுதி இயக்கியிருக்கிறார்.
படத்தின் கதாநாயகியாகனி குஸ்ருதி நடித்திருக்கிறார். நாயகனாக கணபதி முருகேசன் அறிமுகமாகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/thadayam-t.jpg)