Advertisment

எல்லாம் சாத்தியமே

/idhalgal/cinikkuttu/everything-possible

சிறுபடத் தயாரிப்பாளர்களும்', "லோக்கல் சேனல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்விஷன்' தலைவரும் கலந்துகொண்ட வியாபார சந்திப்புக்கூட்டம் சென்னை வடபழனி ஜே.பி. டவரில் நடைபெற்றது.

Advertisment

குறைந்தபட்சம் 70 தயாரிப் பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் வெயில் சூட்டையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் கலந்த

சிறுபடத் தயாரிப்பாளர்களும்', "லோக்கல் சேனல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்விஷன்' தலைவரும் கலந்துகொண்ட வியாபார சந்திப்புக்கூட்டம் சென்னை வடபழனி ஜே.பி. டவரில் நடைபெற்றது.

Advertisment

குறைந்தபட்சம் 70 தயாரிப் பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் வெயில் சூட்டையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Advertisment

d

மூத்த தயாரிப்பாளர் டி. சிவா கில்ட் தலைவர் ஜாக்குவார் தங்கம் இருவரும் தங்கள் கடமையாக நினைத்துக் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

தமிழ்விஷன் சார்பில் அதன் தலைவர் ஆறுமுகம் கலந்துகொண்டு தன்னுடைய கருத்தைக் கூறும்போது ""தமிழ் சினிமாவை தங்கள் கேபிள் டி.வி.யால் எந்த அளவு வியாபாரரீதியில் சப்போர்ட் செய்து வாழ வைக்கமுடியும்'' என்று ஆதாரப்பூர்வமாகக் கூறியபோது வந்திருந்த அனைத்துத் தயாரிப்பார்களுக்கும் தங்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறந்தது.

""எல்லாத் தயாரிப்பாளர்களும் இணைந்து, ஒற்றுமையாகச் செயல் பட்டு, வியாபாரரீதியில் வெற்றி பெறவேண்டும்'' என்று ஜாக்குவார் தங்கம் கூறியதை அனைவரும் ஆமோதித்தனர்.

விரைவில் தியேட்டர் உரிமை யாளர்கள் சங்கம் தங்களால் இயன்ற அளவு சிறிய படங்களை வெளியிட சம்மதித்திருக்கிறது.

கூட்டம் குறித்து போனில் விசாரித்து, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார் திருப்பூர் சுப்ரமணியன்.

,

""சினிமா வியாபாரத்திற்கான முதல் செங்கலை எடுத்து வைத்திருக்கிறோம்.

அனைவரும் சேர்ந்து விரைவில் மாளிகை கட்டுவோம்.

நாம் நேர்மையாக முயன்றால் எல்லாமே சாத்தியம்'' என்கிறார் எச்.3 சினிமாஸ் கஸாலி.

முக்கிய குறிப்பு :

ரீடர்ஸ் அட்ராக்ஷனுக்காக சில ஹீரோயின்களின் போட்டோஸ்தான் இங்கே. மற்றபடி இந்த மேட்டருக்கும் ஹீரோயின்களின் ஃபோட்டோவுக்கும் சத்தியமாய் சம்பந்தமில்லை.

cine070519
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe