Advertisment

சங்கடப்படுத்தும் சமந்தா! சைலண்டான சைதன்யா! ரீ(ரிய)ல் ரிப்போர்ட்!

/idhalgal/cinikkuttu/embarrassing-samantha-silent-saitanya-report-ree-rea

ராம் சரண்- சமந்தா ஜோடிபோட்ட "ரங்கஸ்தலம்' என்ற தெலுங்குப் படம் 2018-ல் ரிலீசானது.

Advertisment

அந்தப் படத்தின் புரமோ ஸ்டில்களில் முழங்காலுக்கும்மேலே பாவாடையைத் தூக்கிச் செருகிக்கொண்டு சமந்தா ஆற்றில் துணி துவைப்பது போலவும் தொடை தெரியும்படி பாவாடையைச் செருகி இடது காலைத் தூக்கி துணி துவைக்கும் கல்மீது வைத்த படியும் படுகவர்ச்சியான ஸ்டில்கள் ரிலீசாகின.

sa

இதைப் பார்த்து சமந்தாவின் கணவரும் நடிகருமான நாகசைதன்யாவும், மாமனார் நாகார்ஜுனாவும் ரொம்பவே அப்செட்டானார்கள். ஆனால் சமந்தாவோ, "இதையெல்லாம் எனது ஸ்வீட் ஹஸ்பெண்ட் கண்டுக்கவே மாட்டார்' என்றார். கடந்த நான்கு மாதங்களுக்குமுன்பு தமிழில் "சூப்பர் டீலக்ஸ்' என்ற ப

ராம் சரண்- சமந்தா ஜோடிபோட்ட "ரங்கஸ்தலம்' என்ற தெலுங்குப் படம் 2018-ல் ரிலீசானது.

Advertisment

அந்தப் படத்தின் புரமோ ஸ்டில்களில் முழங்காலுக்கும்மேலே பாவாடையைத் தூக்கிச் செருகிக்கொண்டு சமந்தா ஆற்றில் துணி துவைப்பது போலவும் தொடை தெரியும்படி பாவாடையைச் செருகி இடது காலைத் தூக்கி துணி துவைக்கும் கல்மீது வைத்த படியும் படுகவர்ச்சியான ஸ்டில்கள் ரிலீசாகின.

sa

இதைப் பார்த்து சமந்தாவின் கணவரும் நடிகருமான நாகசைதன்யாவும், மாமனார் நாகார்ஜுனாவும் ரொம்பவே அப்செட்டானார்கள். ஆனால் சமந்தாவோ, "இதையெல்லாம் எனது ஸ்வீட் ஹஸ்பெண்ட் கண்டுக்கவே மாட்டார்' என்றார். கடந்த நான்கு மாதங்களுக்குமுன்பு தமிழில் "சூப்பர் டீலக்ஸ்' என்ற படம் ரிலீசானது. அதில் கள்ளக் காதல் ஸ்பெஷலிஸ்டாக வந்து கதிகலக்கினார்.

Advertisment

விஜய்யுடன் ஜோடிபோட்ட "தெறி'-யில்கூட முக்கால் வாசி சீன்களில் லோ- ஹிப் தரிசனம் தந்து கிளுகிளுக்க வைத்தார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானா வில், சமந்தா ஹீரோயினாக நடித்த "ஓ பேபி' என்ற படம் ரிலீசாகி நல்ல படம் என்ற பெயரும், கலெக்ஷனும் ஓ.கே.என்ற ரிசல்ட்டும் வந்துள்ளது. "மிஸ் கிரான்னி' என்ற கொரிய படத்தை முறைப்படி ரைட்ஸ் வாங்கி, தெலுங்கில் டைரக்ட் பண்ணியுள்ளார் பி.வி. நந்தினி ரெட்டி. 80 வயதுள்ள கிழவி, திடீரென 20 வயது குமரிப் பெண்ணாக மாறிவிட்டால் எப்படியிருக்கும் என்பதை காமெடியாக சொல்லியிருக் கிறார் நந்தினி ரெட்டி.

படம் முழுக்க காமெடியே கதைக்களம் என்பதால், சமந்தாவின் காமெடிக்கு ஆந்திர ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்சாம். கிழவி கேரக்டரில் நிஜக்கிழவி நடிகையான லட்சுமியும், குமரி கேரக்டரில் சமந்தா வும் நடித்துள்ளனர்.

"ஓ பேபி' படத்தின் ஸ்பெஷலே முழுக்க முழுக்க இப்படத்தில் பெண் கலைஞர்களே பணிபுரிந்திருப்பதுதான். படத்தின் டைரக்டர் நந்தினி, தயாரிப்பாளர் சுனிதா ததி, நிர்வாகத் தயாரிப்பாளர் திவ்யா, புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ, விளம்பரம் நிஹாரிகா என பெண்கள் படையே படத்தைக் கைவசப்படுத்தியுள்ளது.

""கண்ணீர்விட்டுக் கதறுவது, ஆக்ரோஷமாகப் பேசுவது, அவ்வளவு ஏன் ஆக்ஷன் சீன்களில்கூட ஈஸியா நடிச்சிரலாம்.

ஆனா காமெடியனியாக பண்ணுவதுதான் ரொம்ப கஷ்டம். ரசிகர்கள் காமெடி சீன்களை ஸ்கிரீனில் பார்த்து வயிறு குலுங்க சிரிப்பதுதான் சிறந்த விருது. ஆனால் இந்த "ஓ பேபி' படத்தில் காமெடி பண்ணி காமெடி பண்ணி, ஷூட்டிங்கின் கடைசி நேரத் தில் முழு எனர்ஜியும் போய் விட்டது'' என ஓப்பனாகப் பேசுகிறார் "ஓ பேபி' சமந்தா. படத்தினைப் பற்றிப் பேசிய சமந்தா தனது பெர்ஷனல் வாழ்க்கை குறித்தும் பேசினார்.

sam

""சைதன்யாவை நான் அடைய பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனக்கும் அவருக் கும் இடையே இருக்கும் நட்பு, இணக்கமாக விட்டுக் கொடுத்துவிடாத காதல் என ஐ ஆம் வெரி வெரி ஹேப்பி. எங்களின்மூலம் இந்த உலகத்திற்கு ஒரு குழந்தையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. என் கனவெல் லாம் இங்கு ஆண்களுக்கு கிடைத்திருப்பதைப்போலவே ஒரு உலகம் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதுதான்'' என க்யூட்டாகப் பேசும் சமந்தா, மாமனார் நாகார்ஜுனா நடிக்கும் "மன்மதடு-2' படத்தில் கேமியோ கேரக்டரில் கலக்கியிருக்காரம்.

பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உலகத்தைப் பற்றிப் பேசுவதாலோ என்னவே சினிமா புரமோ பங்ஷன்களில் செம கவர்ச்சியான காஸ்ட்யூம் களில் வந்து அதிரடி கிளப்புகிறார் சமந்தா. இப்போது ரிலீசாகி ஹிட் அடித்துள்ள "ஓ பேபி' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் ஃபங்ஷனில் செம தூக்கலான காஸ்ட்யூமில் சமந்தா கலந்துகொண்ட ஸ்டில்களைப் பார்த்து எதுவும் சொல்ல முடியாமல் சைலண்டாகிவிட்டார் சைதன்யா.

-பரமேஷ் & மதி

cine230719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe