விளையாட்டில் இருக்கும் உச்சகட்ட அரசியலை அழுத்தமாகச் சொல்ல வந்திருக்கிறது "எழுமின்.'
அழகம்பெருமாள் நடத்தும் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்புக் கலை பயில்கிறார்கள் அஜய், கவின், வினித், அர்ஜுன், ஆதிரா, சாரா ஆகிய மாணவ- மாணவிகள். மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வாகிறார் கள். ஆனால் பணபலமும் அரசியல் பலமும் உள்ளே வந்ததால், அவர்களை ரிஜெக்ட் பண்ணிவிட்டு, வேறொரு டீமைத் தேர்வு செய்கிறார் அழகம் பெருமாள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/elumeen_0.jpg)
இந்த நிலையில் தொழிலதிபர் விவேக்- தேவயானி தம்பதிகளின் மகன் அர்ஜூன், மாநில அளவிலான குத்துச்சண்டையில் கோப்பையைக் கைப்பற்றிய அதே மேடையில் மாரடைப்பால் மரணமடைகிறான்.
மகனின் மரணத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்ட விவேக், அதே மகனின் நினைவாக ஸ்போர்ட்ஸ் அகாடமியை ஆரம்பித்து, அழகம்பெருமாளால் நிராகரிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து இந்திய அளவிலான போட்டிக்கு தயார்படுத்துகிறார். போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றார்களா? அவர்களின் லட்சியம் நிறைவேறியதா என்பதுதான் "எழுமின்.'
அலட்டல் இல்லாத விவேக், பாந்தமான தேவயானி, வயசுக்கேற்ற துறுதுறுப்பு, வேகத்துடன் அந்தக் குழந்தைகள் என ரொம்பவே கவனம் எடுத்துப் படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணியிருக்கிறார் வி.பி.விஜி. கேமராமேன் கோபி ஜெகதீஸ்வரனும், பின்னணி இசை ஸ்ரீகாந்த் தேவாவும், மியூசிக் டைரக்டர் கணேஷ் சந்திரசேகரனும் டைரக்டருக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள்.
பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் தியேட்டருக் குச் சென்று கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் "எழுமின்.' இரண்டு பெரிய படங்களின் ரிலீசுக்கு மத்தியில் "எழுமின்' படத்திற்கும் தியேட்டர்காரர் கள் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-10/elumeen-t_0.jpg)