"நந்தகுமார் தயாரித்து, ஐயப்பன் இயக்கிய "தோனி கபடி குழு' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நான் முதன்மை வில்லனாக கதாபாத்திரமேற்று நடித்தேன். அதற்கு, இயக்குநர் ஐயப்பன், தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு நன்றி. இதற்குமுன் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
மேலும், "வேட்டை நாய்' படத்திலும் நடிக்கிறேன். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாகவும், ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தை "மன்னாரு' படம்மூலம் இயக்குநராக அறிமுகமான ஜெய்சங்கர் இயக்குகிறார்.
வாய்ப்பு தந்த அவருக்கு என் மனமார்ந்த நன்றி. மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஜோதிமுருகன், விஜய் கார்த்திக், இருவருக்கும் எனது நன்றி. "வேட்டை நாய்' படமும் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.
சுமார் எட்டு வருட காலமாக வாய்ப்புக்காக பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள் என்று பலரிடமும் முயற்சி செய்திருக்கிறேன். அதனுடைய முயற்சி தான் இன்று நான் நடிகன்'' என பூரிப்புடன் சொல்கி றார் விஜித் சரவணன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01/vsaravanan-t.jpg)