Advertisment
/idhalgal/cinikkuttu/dubbing-king

மொழிமாற்றுப் படங்களைத் தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டுவருபவர் ஏ.என். பாலாஜி .

Advertisment

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி. சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கிய வர், பின்னர் மொழி மாற்றுத் திரையீட்டுத் தொழிலுக்கு மாறினார்.

Advertisme

மொழிமாற்றுப் படங்களைத் தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டுவருபவர் ஏ.என். பாலாஜி .

Advertisment

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி. சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கிய வர், பின்னர் மொழி மாற்றுத் திரையீட்டுத் தொழிலுக்கு மாறினார்.

Advertisment

doubbingking

"லவ் டுடே' முதல் "ரகளை' வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர். மகேஷ் பாபுவின் "பிசினஸ் மேன்', "நம்பர் ஒன்', பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், நயன்தாரா படங்கள் மற்றும் நாகார்ஜூனாவின் பத்து படங்கள், சைதன்யா படங்கள் என வளர்ந்து இப்போது விஜய் தேவரகொண்டா படங்களை மொழி மாற்றி வெளியிட்டுவருகிறார்.

அந்த வரிசையில் மார்ச் 15-ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த "அர்ஜூன் ரெட்டி' படம்.

""இது "துவாரகா' தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்.

விஜய் தேவரகொண்டாவை வைத்து சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் ஆந்திரா முழுக்க 100 நாட்களைத் தாண்டி ஓடி வெற்றிபெற்ற படம்.

இதை தமிழுக்கு கொண்டு வருவது எங்கள் நிறுவனத்துக்கு பெருமை.

சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் "கீத கோவிந்தம்' 100 கோடி வசூல்செய்து சாதனை படைத்தது. அவருக்கு தென்னிந்தியா முழுவதும் இளம் ரசிகர்கள் பெருகிவருகிறார்கள்.

விஜயசாந்தி, சிரஞ்சீவி, மகேஷ் பாபு தொடங்கி நல்ல மொழிமாற்றுப் படங்களைத் தமிழ் ரசிகர்கள் வரவேற்று வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். ""அதேபோல் இந்த "அர்ஜுன்ரெட்டி'-யும் வெற்றிபெறும்'' என்கிறார் ஏ.என். பாலாஜி.

படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம்- ஸ்ரீனிவாச ரவீந்திரா.

cine120319
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe