Advertisment

பி.ஆர்.ஓ.வை அலறவிட்ட டுபாக்கூர் கும்பல்! -சீட்டிங் வெடி!

/idhalgal/cinikkuttu/dubakur-mob-shouted-pro-shooting-explosives

சீட்டிங் சினிமா கம்பெனிகளைக் கடந்த அக்டோபர் 30 தேதியிட்ட இதழில் விலாவாரியாக எழுதியிருந்தோம். இப்போது மீ டூ வில்லங்கமும் சினிமா உலகைச் சிதைத்துவரும் நிலையில், சினிமா பி.ஆர்.ஓ. ஒருவரையே சீட்டிங் வெடியால் அலறவைத்திருக்கிறது டுபாக்கூர் கும்பல் ஒன்று.

Advertisment

pro

கடந்த 30 வருடங்

சீட்டிங் சினிமா கம்பெனிகளைக் கடந்த அக்டோபர் 30 தேதியிட்ட இதழில் விலாவாரியாக எழுதியிருந்தோம். இப்போது மீ டூ வில்லங்கமும் சினிமா உலகைச் சிதைத்துவரும் நிலையில், சினிமா பி.ஆர்.ஓ. ஒருவரையே சீட்டிங் வெடியால் அலறவைத்திருக்கிறது டுபாக்கூர் கும்பல் ஒன்று.

Advertisment

pro

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு பி.ஆர்.ஓ.வாகப் பணிபுரிபவர் மௌனம் ரவி. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் ரொம்பவே டர்ராகிவிட்டார் ரவி. தேனி ராயல் ரெசிடென்சி ஓட்டலிலில் பக்கா செட்டப்போடு ஒரு கும்பல் ரூம் போட்டுள்ளது.

Advertisment

mounamravi

""என் பேரு மௌனம் ரவி, சினிமாவுல 30 வருஷமா பி.ஆர்.ஓ.வாக இருக்கேன். இப்ப சினிமா கம்பெனி ஆரம்பிச்சு புதுப்படம் ஒண்ணு ஸ்டார்ட் பண்ணப்போறேன். இந்தப் படத்துல ஹீரோயினா நடிக்கிறதுக்கு இளம்பெண்கள் தேவை''ன்னு கூவிக்கூவி அழைத்திருக்கிறான் ஒருவன். அவனின் சர்க்கரைப் பேச்சில் மயங்கிய சில இளம்பெண்களும் போயிருக்கிறார்கள். (சிக்கினார்களா, சிதைந்தார்களா என்பது நமக்குத் தெரியாது).

டுபாக்கூர் பார்ட்டிகளின் இந்த அஜால் குஜால் மேட்டர்கள் மௌனம் ரவிக்குத் தெரிந்ததும் அலறி விட்டார். ""நான் இப்ப தேனியில இல்லை. சென்னையிலதான் இருக்கேன். என் பேரச்சொல்லிலி எவனோ விளையாடுறான்.

நான் சினிமா எடுக்கவும் இல்ல, எடுக்கப் போறதுமில்ல. இந்த நம்பரிலிலிருந்து யாராவது மௌனம் ரவி பேசுறேன்னு சொன்னா போலீசில் புடிச்சுக் கொடுங்க'' என வாட்ஸ்- அப்பில் உண்மை நிலவரத்தை விளக்கி விட்டு, சில செல்ஃபோன் எண்களையும் கொடுத்திருந்தார்.

எப்படி யெல்லாம் யோசிக்கிறாய்ங்க பாருங்க.

cine131118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe