டேக் ஓ.கே. கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. ராஜன் தயாரிக்கும் படம் "மிரட்சி'.

"ஜித்தன்' ரமேஷ் இந்தப் படத்தின்மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கு கிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் கொல்கத்தாவைச் சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

cc

மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

ஒளிப்பதிவு- ரவி. வி, எடிட்டர்- என். ஹரி, இசை- ஆனந்த், பாடல்கள், வசனம்- என். ரமேஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எம்.வி. கிருஷ்ணா.

படம் பற்றி இயக்குநர் நம்மிடம் சொன்னது என்னன்னா...

""முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கியிருக்கிறோம். கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. "ஜித்தன்' ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

Advertisment

படத்திலுள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஒருமணி நேரம் மட்டும் இடைவேளைவிட்டு கிளைமாக்ஸ் காட்சிகளைப் படம் பிடித்தோம்.

"மிரட்சி' அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிரளவைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை'' என்றார் மிரட்சியாக.