சாலா பிக்ஸ், எம்.கே.கே.பி. புரொடக்ஷன் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது.

Advertisment

இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார்.

sasn

சமீபத்தில் வெளியான "ஏ1' வெற்றிப்படத்தில் கதாநாயகியா நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகமாகி றார். இவர் "மிஸ் கர்நாடகா 2017' அழகிப் பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த் ராஜ், மொட்ட ராஜேந்திரன், "லொள்ளு சபா' மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Advertisment

இப்படத்தினை "ஜெயம் கொண்டான்', "கண்டேன் காதலை', "இவன் தந்திரன்' போன்ற பல வெற்றிப் படங் களை இயக்கிய கண்ணன் இயக்கிவருகிறார்.

படப்பிடிப்பு ஒரேகட்ட மாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிலிம் சிட்டி யில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுவருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இசை- சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு- 96 புகழ் சண்முகசுந்தரம், எடிட்டிங்- செல்வா, கலை- ராஜ்குமார், சண்டைப்பயிற்சி- ஸ்டண்ட் சில்வா, நடனம்- சதீஷ் & டேனி, தயாரிப்பு நிறுவனம்.