ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான "இருட்டு அறையில் முரட்டு குத்து' ரிலீசுக்குமுன்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

yashika

ஹீரோயின் யாஷிகா ஆனந்த் பேசுகையில், ""இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியபோது என்னுடைய கனவு நனவானது. இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சியில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இதுபோன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித் தால் சினிமா அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்'' என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார், ""நான் இயக்கும் இரண்டாவது படம் "இருட்டு அறையில் முரட்டு குத்து.'

அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இதுபோன்ற படங்களை எடுக்கிறார்? கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறார் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர்.

இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்குப் படமாகப் பார்த்தால் பொழுது போக்குப் படமாக மட்டுமே தெரியும். அப்படித் தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என ஆலோசனை கூறினார்.