டோண்ட் ஒர்ரி... பி ஹேப்பி

/idhalgal/cinikkuttu/dont-wory-b-happy

"சிவப்பு நிற ஒயினுடன் அவ்வப்போது பெண்களை முத்தமிட விரும்புவேன்' என்று ஒரு பெண் பாடினால் என்ன அர்த்தம்? அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் தானே! பிறகு

"சிவப்பு நிற ஒயினுடன் அவ்வப்போது பெண்களை முத்தமிட விரும்புவேன்' என்று ஒரு பெண் பாடினால் என்ன அர்த்தம்? அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் தானே! பிறகு ஏன் பாப் பாடகி ரீடா ஓராவுக்கு பிரச்சினை வந்தது?

rita

இந்தப் பாடல் வரியில் அவர் ஆண்களை புறக்கணிப்பதாக ஒரு கருத்து உருவானதால்தான் பிரச்சினை. "ரீடா ஓராவுக்கு ஆண்களை பிடிக்காதோ?' என்று பாடகர் ஒருவர் கேள்வி எழுப்பி அது வைரலாக பரவிவிட்டது. இதையடுத்து ரீடா வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

""நான் ஆண்களோடும் பெண்களோடும் ரொமாண்டிக் மூடில் பழகியிருக்கிறேன். இந்தப் பாடல் வரி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆண்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். யாரையும் ஒதுக்க வேண்டும் என்று நான் நினைக்க வில்லை.''

மார்க்கெட்டைத் தக்கவைக்க எல்லா இடத்திலும் இதுதான் வழிபோல!

இதையும் படியுங்கள்
Subscribe