"மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

Advertisment

இதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியபோது,

c""இந்தப் படத்தைத் தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக் கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார் கள். சொன்னபோதே வெற்றி- தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், இந்தப் படத்தைத் தயாரிக்கவேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்! தயவு செய்து இந்தப் படத்தை இளைஞர் கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்'' என்றார்.

Advertisment

பாடலாசிரியர் யுகபாரதி-

""ஒரு மகிழ்ச்சியான, நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப்படம் உண்மையாக வந்திருக்கிறது'' என்றார்.

ராஜு முருகன்-

""இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்துதான் எழுதினார்.

Advertisment

அண்ணனின் உழைப்பு மிகப் பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

c

இயக்குநர் சரவண ராஜேந்திரன்-

""எல்லாரும் என்னை நிதானம், பொறுமை என்றார் கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது'' என்றார்.

"மெஹந்தி சர்க்கஸ்' வருகிற 19-ஆம் தேதி ரிலீசாகிறது.