Advertisment

வேண்டவே வேண்டாம் சோஷியல் மீடியா'' -ஜோதிகா "பளிச்' பேட்டி!

/idhalgal/cinikkuttu/dont-want-social-media-jothika-interview

ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து தனி ஆவர்த்த னம் செய்துவருகிறார் நடிகை ஜோதிகா. சமீபத்தில் வெளியான "ராட்சசி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை "ஜாக் பாட்' திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் பற்றியும், பொதுவான கேள்வி களுக்கும் ஜோதிகா கொடுத்த சுவாரசிய மான பேட்டி இதோ...

Advertisment

dd

நீங்க, சூர்யா இரண்டுபேருமே ஷுட்டிங் போற சமயத்தில் உங்க குழந்தைங்க யாரை மிஸ் பண்ணுவாங்க?

ரெண்டு பேரை யுமே மிஸ் பண்ணு வாங்க. பசங்களுக்கு சில விஷயத்திற்கு அப்பா வேணும். சில விஷயங் களுக்கு அம்மா வேணும்.

"ஜாக்பாட்' அக்ஷயா பற்றி..?

அக்ஷயா ரொம்ப போல்டான லேடி... இது காமெடி படம்போல தெரியும். ஆனா காமெடிக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. இந்த

ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து தனி ஆவர்த்த னம் செய்துவருகிறார் நடிகை ஜோதிகா. சமீபத்தில் வெளியான "ராட்சசி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை "ஜாக் பாட்' திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் பற்றியும், பொதுவான கேள்வி களுக்கும் ஜோதிகா கொடுத்த சுவாரசிய மான பேட்டி இதோ...

Advertisment

dd

நீங்க, சூர்யா இரண்டுபேருமே ஷுட்டிங் போற சமயத்தில் உங்க குழந்தைங்க யாரை மிஸ் பண்ணுவாங்க?

ரெண்டு பேரை யுமே மிஸ் பண்ணு வாங்க. பசங்களுக்கு சில விஷயத்திற்கு அப்பா வேணும். சில விஷயங் களுக்கு அம்மா வேணும்.

"ஜாக்பாட்' அக்ஷயா பற்றி..?

அக்ஷயா ரொம்ப போல்டான லேடி... இது காமெடி படம்போல தெரியும். ஆனா காமெடிக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. இந்தப்படத்தில் கல்யாண் சாரின் கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடித்தது. ஒரு பெரிய ஹீரோ படத்தில், அந்த ஹீரோவுக்கு என்னவெல்லாம் இருக்குமோ அதெல் லாம் இப்படத்திலும் நிறைய இருக்கு.

ஹீரோவுக்கு ஈக்குவலா ஒரு ஹீரோ யினை திங் பண்ணி, ரைக்டிங் பண்ண கல்யாணின் அந்த தாட்ஸ் எனக்குப் பிடித்தது.

மேலும் கல்யாண்மேல எனக்குப் பெரிய ஆச்சர்யம் என்னன்னா... 24 நாட்களில் படத்தை முடிச்சிட்டார். ஸ்பாட்டுக்குப்போனா எல்லாப் பக்கமும் கேமரா வச்சிருப்பார்.

இப்போதுள்ள புதிய இயக்குநர்கள் எப்படி...?

பிரில்லியண்டா யோசிக்கிறாங்க. நான் பொதுவா கதையை மூன்று மாதத்திற்கு வாங்கி மனப்பாடம் பண்ணுவேன். இது பாலா சாரிடம் படித்த பாடம்.

உங்க பசங்களுக்கு "ராட்சசி' மாதிரி படங் கள்ல வர்ற ஜோதிகாவைப் பிடிக்குமா?

பசங்களுக்கு "ஜாக்பாட்' ஜோதிகாவை தான் பிடிக்குதுனு நினைக்கிறேன். என் படங்கள் பற்றி என் பையனைவிட பொண்ணுதான் நிறைய பேசுவா.

பயோபிக் படத்தில் நடிப்பீர்களா?

இதுவரைக்கும் அந்த ஐடியா இல்லை. மற்றபடி பல இளம் இயக்குநர்கள் எனக்காகவே சில கதைகளை எழுதுறாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உமன்ஸ் பத்தி இன்றைய இளை ஞர்கள் ரைட்டப் பண்றது உண்மையாவே அமேசிங்கான விஷயம். ஆனால், ஆடியன்ஸ் ஹீரோயின் படத்திற்கு பெரிய ஓபனிங் கொடுக்க மாட்டேன் றாங்க. அதுதான் கஷ்டமா இருக்கு!

தயாரிப்பாளர் சூர்யா எப்படி...?

மத்த கம்பெனிகளைவிட இங்க தாராளமா செலவு பண்ணு வாங்க. எனக்கு எங்க கம்பெனி செம கம்ஃபர்ட்டா இருக்கும். நான் லீட் கேரக்டர்ல நடிச்ச படத்திற்கு முதன்முறையா 100 டான்ஸர் யூஸ் பண்ணிருக்கது இந்தப் படத்துக்குத்தான். மேலும் சனி, ஞாயிறு லீவு எடுத்துப் பேன். அந்த சவுகரியம்லாம் தயாரிப்பாளர் சூர்யாவிடம் தான் கிடைக்கும்.

"ராட்சசி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் "ஜாக்பாட்'-டில் உங்கள் சம்பளத்தை ஏற்றி யுள்ளீர்களாமே? சூர்யா சம்ப ளம் எப்படி கொடுத்தார்?

எனக்கு சம்பளம் அதிகம் தான். எல்லா சம்பளமும் ஒரே வீட்டுக்குத்தானே வருது! நான் என்ன தனியாவா எடுக்கப் போறேன்?

"ராட்சசி'க்கு வந்த முக்கிய மான பாராட்டு...?

சிலர் ஈரோட்டுல ஒரு கவர்மென்ட் ஸ்கூலுக்குப் பஸ் கொடுத்திருக்காங்க.

சிலபேர் ஸ்கூலுக்குப் ஃபண்ட் கொடுத்திருக்காங்க. இதுதான் பெரிய பாராட்டு!

நீங்க ஏன் ஒரு கவர் மென்ட் ஸ்கூல்ல ஒருநாள் டீச்சரா இருக்கக் கூடாது?

அப்படியெல்லாம் போக முடியாது. அதுக்கு முக்கியமா டிகிரி வேணும்.

உங்களின் இந்த வெற்றி கரமான பயணத்திற்கு காரணம்?

என்னைவிட பெரிய நடிகை கள் இருந்தாலும், சூர்யா இருந்தத தால்தான் எனக்கு இப்படியான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. "36 வயதினிலே' படம் பண்ணியபிறகு, இரண்டு வருஷம் எனக்குப் படம் வரல. மறுபடியும் "மகளிர் மட்டும்' படத்தை சூர்யா தயாரிச்சார். என் னைப் பொருத்தவரை நல்லபடம் பண்ணணும். ஏன்னா... எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. நல்லபடங் கள் பண்ணுவேன். ஏன்னா எனக்கு 2டி இருக்கு... சூர்யா இருக்கார்.

நீங்க ஏன் சோசியல் மீடியா வுக்கு வர்றதில்ல?

அதில் ஏதாவது நெகட்டிவிட் டிஸ் பார்த்தோம்னா... அது மனசைக் காயப்படுத்துது. அதான், வேண்டவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்!

Advertisment
cine130819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe