ந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு தமிழகத்தில் அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அ.தி.மு.க ஆதரவு அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ss

இதற்கு எதிர்ப்புத் தெரிவித் துள்ள நடிகர் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ""என்னுடைய மாநிலத்துக்கும் என்னுடைய மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதிநிதியாக இருப்ப தற்கு நான் மிகவும் அவமானப் படுகிறேன். குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்த தன் மூலம் அவரின் உண்மையான நிறம், அவருடைய நேர்மையின் அளவு, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் எண்ணம் தெரிய வந்துள்ளது'' என்று ஆவேசமாக குறிப்பிட் டார்.

இது சர்ச்சையான நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேட்ட செய்தி யாளர்கள், ""சார் சித்தார்த் தமிழக அரசை கடுமை யாக விமர்சித்திருக்கிறாரே'' என்க, ""சித்தார்த்தா யார் அவர்? எந்தப்படத் தில் நடித்திருக்கிறார்? அவருக்கெல்லாம் விளம்பரம் தரமுடியாது. நெக்ஸ்ட்!'' என கடந்து சென்றார்.

Advertisment

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த நடிகர் சித்தார்த், ""அக்கறையுடன் பேசும் வரி செலுத்தும் குடிமக்களை அவமதிப்பது சரியல்ல. நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக ஆக்கத் தேவையில்லை. உங்கள் வேலையைச் செய்யுங்கள். அது போதும்.

நான் யார் என்று கேட்கிறீர்கள். உங்களது அரசாங்கம் 2014- ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கியது. நீங்கள் 2017-ல் அறிவித்த அந்த விருதை இன்னும்கூட எனக்கு வழங்கவில்லை. விளம் பரத்திற்காக நான் பேசத் தேவையில்லை. நான் எனது இடத்தை சொந்தமாக, நேர்மை யாக சம்பாதித்து வந்திருக்கிறேன்'' என பதிலளித்தார்.

ட்விட்டர்வாசிகள் பலர் நடிகர் சித்தார்த் தின் கருத்துக்கு ஆதரவளித்தனர்!