"களவாணி-2' படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு, பிரஸ் சந்திப்பு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்...

Advertisment

ee

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் இளவரசு பேசும்போது, ""ஒரு தயாரிப்பாளராக இயக்குநர் சற்குணம் பட்ட கஷ்டங்களை ஆரம்பத்திலிருந்து ரிலீஸ் தேதிவரை நேரிலேயே பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.. தம்பி நீங்கள் தயாரிப்பாளராக இல்லாமல் படங்களை டைரக்ட் மட்டும் பண்ணினாலே போதும் என்பதே என்னுடைய வேண்டு கோள்'' என்றார்.

Advertisment

வில்லனாக நடித்த துரை சுதாகர் ""நான் நடிக்க வந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இவ்வ ளவு நாள் கஷ்டப் பட்டதற்கு எனக்கு இந்த வெற்றிப் படத் தில் ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து, ஒரு நல்ல களம் அமைத் துக் கொடுத்து என்னை ஒரு நடிகனாக நிலைநிறுத்தி இருக்கிறார் இயக்குநர் சற்குணம்.''

இயக்குநர் சற்குணம்.

"களவாணி 2' படத்திற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள்.. அந்த வகையில் மக்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நன்றி.

Advertisment

இந்தப் படத்தில் வில்லனாக நடித்த துரை சுதாகர் அந்த கதாபாத்திரத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டார் என்பதைப் பார்த்தபோது ஆச்சரியம் ஏற்பட்டது.. ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட சிரமங்களின்போது... எனக்கு ஒரு சகோதரர்போல உறுதுணையாக நின்றவர் ராஜ்மோகன்'' என்றார்.

rr

நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அவசர அவசரமாக வந்த ஹீரோயின் ஓவியா அனைவருடனும் தனித்தனியாகவும், குரூப்பாகவும் போட்டோ எடுத்துக்கொண்டு ""வி.ஆர். வெரி ஹேப்பி'' என்றார்.