/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dr-saravanan.jpg)
மாநகர் மதுரையில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின் நிறுவனரான மக்கள் மருத்துவர் டாக்டர் பி. சரவணன், ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்ப்பதில் மனநிறைவு கொள்பவர். பணத்துக்கே வழியில்லை, ஆனால் உயிரைக் காப்பாற்ற வேண்டுமே என போராடும் ஏழைகளுக்கு இலவசமாக ஆபரேஷனே செய்யும் அளவுக்குத் தயாள குணம்கொண்ட பெருந்தகை யாளர்.
மனதுக்கு நிம்மதி மருத்துவத் தொழில் என்றாலும், சினிமாவில் நடிப்பதிலும் அவருக்கு அலாதிப் பிரியம். "அகிலன்' என்ற படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த டாக்டர் சரவணன், இப்போது நடித்திருக்கும் படம், "அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.' மதுரை ஜி. அழகர் தயாரிப்பில், எம்.எஸ். செல்வா டைரக்ஷனில் தயாராகும் இப்படத்தில் சிங்கம்புலி, போண்டா மணி, நெல்லை அழகேஷ், குமரேசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
""படத்துலதான் அரண்ட மாதிரி நடிச்சிருக்காரு, ஆனா நிஜத்திலோ ரொம்பவும் போல்டான ஆளுதான் டாக்டர் சரவணன்'' என்கிறார் டைரக்டர் எம்.எஸ். செல்வா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/dr-saravanan-n.jpg)