மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக கே. கார்த்திகேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
எஸ்.டி. விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய "கோலிசோடா-2' படத்திலும், இயக்குனர் சமுத்திரக்கனி- சசிகுமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப் படும் "நாடோடிகள் 2' படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pooja_0.jpg)
இவருடன் முக்கிய வேடத்தில் "இளையதிலகம்' பிரபு நடிக்கிறார்.
மேலும் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராகப் பணியாற்றியவரும், "கோலிசோடா-2' படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமரா ஆன் செய்ய, இயக்குனர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியைப் படமாக்கினார்.
சென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமாக ரெஸ்ட்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/pooja-t_1.jpg)