வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக "அமைதிப்படை-2', "கங்காரு' என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது "மிகமிக அவசரம்' படத்தின்மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

Advertisment

priyankaகதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். "புதிய கீதை', "கோடம்பாக்கம்', "ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குநருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.கே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே. ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது, ""நிறைய போராட்டங்களுக்கு பிறகு "மிகமிக அவசரம்' படத்தின்மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்.

Advertisment

இங்கே நிறைய பேருக்கு இந்தப் பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது. ஆனால் என்னால் முடியும். தமிழ்ப் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்தப் படம் சொல்லும்.

meeramethan

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்துதான் கிடைத்தது. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர் களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குநர்கள்தான் நம்பவேண்டும்'' என டச்சிங்காக பேசினார் ஸ்ரீபிரியங்கா.

Advertisment

நடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன், ""ஸ்ரீ பிரியங்கா வருத்தப்பட தேவையில்லை. இங்கே தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கும் வெற்றி கிடைக்கும். ஆனால் கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும். நம்மைப் போன்ற பெண்களைப் பார்த்துத்தான் இன்னும் தமிழ்ப் பெண்கள் இந்த சினிமாவிற்குள் நம்பிக்கையுடன் நுழைவார்கள். அதற்கு நாம் ஒரு காரணமாக இருப்போம்'' எனஆறுதலாகப் பேசினார்.

directorsueshkamakshi

படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, ""எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன்.

படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள். ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப் பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.

நாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரி கள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம்மீது திருப்பி னால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்'' என ஓப்பனாகப் பேசினார்.