Advertisment

டூப்பும் இல்ல, ரோப்பும் இல்ல! -இளம் ஹீரோவின் துணிச்சல்!

/idhalgal/cinikkuttu/do-not-even-have-rope-hero-hero

கௌசிக்கிற்கு 23 வயதுதான். "வீரதேவன்' என்ற படம்தான் கௌசிக்கிற்கு முதல் படம். இந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியின் அடையாளம் பளிச்சென தெரிந்ததால், சர்ச்சையானது. இவரின் இரண்டாவது படமான "ஸ்பாட்' சமீபத்தில் ரிலீசாகி, சில தியேட்டர்காரர்களின் குழப்படியால், மீண்டும் ரிலீசாகியுள்ளது. இப்போது கௌசிக்கின் கைகளில் "கங்கணம்', "ஆவி பறக்கும் டீக்கடை', "சதா', "சேட்டைப் பசங்க', "6 முதல்

கௌசிக்கிற்கு 23 வயதுதான். "வீரதேவன்' என்ற படம்தான் கௌசிக்கிற்கு முதல் படம். இந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியின் அடையாளம் பளிச்சென தெரிந்ததால், சர்ச்சையானது. இவரின் இரண்டாவது படமான "ஸ்பாட்' சமீபத்தில் ரிலீசாகி, சில தியேட்டர்காரர்களின் குழப்படியால், மீண்டும் ரிலீசாகியுள்ளது. இப்போது கௌசிக்கின் கைகளில் "கங்கணம்', "ஆவி பறக்கும் டீக்கடை', "சதா', "சேட்டைப் பசங்க', "6 முதல் 6 வரை' என கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.

Advertisment

h

வளரும் அந்த இளம் ஹீரோ நம்மிடம் மனம்விட்டுப் பேசினார்- ""முதல் படத்தில் வரும் அந்த சாதி அடையாளம், படத்தின் தயாரிப்பாளரான எங்க அப்பாவையும், என்னையும்மீறி நடந்தவை. அதனால், அந்த மேட்டரையே மறந்துருவோம் ப்ளீஸ். நான் நடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். ஆமா, எல்லாரும் இதத்தானே சொல்றாங்கன்னு நீங்க நினைக்கலாம்.

ஆனா, உண்மை யிலேயே ஆறும், ஆறு வெரைட்டின்னு சத்தியம் பண்ணிச் சொல்வேன்.

இப்போது ரிலீசுக்குத் தயாரா இருக்கும் "6 முதல் 6 வரை' படம் க்ரைம் த்ரில்லர். மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை நடக்கும் திகில் சம்பவங்கள் தான் படம். "ஆவி பறக் கும் டீக்கடை' காமெடி பேய்ப்படம். "சேட்டைப் பசங்க' டான்ஸை பேஸிக்காகக் கொண்ட படம். இப்ப ஷூட்டிங் போய்க் கொண்டி ருக்கும் "கங்கணம்' ரிவெஞ்ச் லவ் ஸ்டோரி. இந்தப் படத்திற்காக 30 அடிக்கும் மேலான உயரத்திலிருந்து குதிக்கும் காட்சியில் டூப்பும் இல்லாம, ""ரோப்பும் இல்லாம நடிச்சிருக்கேண்ணே.'' என்றவரிடம், ""சினிமாவுக்காக என்ன பயிற்சி எடுத்திருக்கீங்க தம்பி?'' என்றோம்.

"""கூத்துப்பட்டறை'யில நடிப்புப் பயிற்சி, வெஸ்டர்ன், கிளாசிக், ஃபோக் என தனித்தனி டான்ஸ் பயிற்சி. சிலம்பம் முறையாகக் கத்துக்கிட்டேன். எங்க அப்பா கோபால் நேஷனல் லெவல் கராத்தே மாஸ்டர்ங்கிறதால, சின்ன வயசுலயிருந்தே கராத்தே கத்துக்கிட்டு, பிளாக் பெல்ட் வாங்கியிருக்கேன்.'' என பூரிப்புடன் பேசினார் கௌசிக்.

இந்தப் படத்தில் கௌசிக்கிற்கு ஜோடி போடுகிறார் ஸ்ரீபிரியங்கா. சுரேஷ் காமாட்சி தயாரிப்பு, டைரக்ஷனில் நடித்த "மிகமிக அவசரம்' படம் எப்ப வரும்னு தெரியாத கவலையில் இருந்த ஸ்ரீபிரியங்காவுக்கு "கங்கணம்' ரொம்பவே ஆறுதலா இருக்காம்.

Advertisment
cine020419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe