Advertisment

பயம் இல்லாமல் தொழில் செய்யணும்! -ரம்யா நம்பீசன் ஆசை!

/idhalgal/cinikkuttu/do-business-without-fear-ramya-nambeesan-desire

"அநீதிக்கு எதிராகப் பேசும்போது ஒரு பகுதியிலிருந்து எதிர்ப்பு வருவது இயற்கைதானே'' என்கிறார் ரம்யா நம்பீசன்.

Advertisment

மலையாள நடிகையான ரம்யாவுக்கு சமீபகாலமாக மலையாளத்தில் வாய்ப்புகளே இல்லை. பிரபல நடிகைமீது ஏவப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் ரம்யாவும் முக்கியமானவர்.

r

"மீ டூ' விவகாரத்தில் மலையாள சினிமா உலகில் பல நடிகர்களும், இயக்குநர்களும் சிக்கினார்கள். மலையாள சினிமா உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இதையடுத்து, வர்கீஸ் தலைமையில் விசா ரணை கமி

"அநீதிக்கு எதிராகப் பேசும்போது ஒரு பகுதியிலிருந்து எதிர்ப்பு வருவது இயற்கைதானே'' என்கிறார் ரம்யா நம்பீசன்.

Advertisment

மலையாள நடிகையான ரம்யாவுக்கு சமீபகாலமாக மலையாளத்தில் வாய்ப்புகளே இல்லை. பிரபல நடிகைமீது ஏவப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் ரம்யாவும் முக்கியமானவர்.

r

"மீ டூ' விவகாரத்தில் மலையாள சினிமா உலகில் பல நடிகர்களும், இயக்குநர்களும் சிக்கினார்கள். மலையாள சினிமா உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இதையடுத்து, வர்கீஸ் தலைமையில் விசா ரணை கமிஷன் அமைக் கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணையில் பங்கேற்று, வாக்கு மூலம் அளித்த வர்களை மலையாள நடிகர் சங்கம் ஒதுக் கிவைத்தது.

இதில் ரம்யாவும் பாதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.

Advertisment

தமிழில் விஜய் சேதுபதியுடன் "சேதுபதி' என்ற படத்தில் நடித்தார் ரம்யா. அதன்பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால், 2015-ல் மலையாள வாய்ப் புகள் சுத்தமாக இல்லை. இதற்கு அவருடைய வெளிப்படையான எதிர்ப்புதான் காரணம் என்று கூறப்பட்டது.

அந்த விசாரணையில் பங்கேற்ற பிறகு, ரம்யா "வைரஸ்', "அஞ்சாம் பத்திரா' என்ற படங்களில் மட்டும் சிறிய கேரக்டர்களில் வந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சிரித்துக்கொண்டார்.

""வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு எதை வேண்டுமானாலும் காரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நமக்கு சரியானது எதுவோ அதைத் தயங்காமல் செய்து, அதில் உறுதியாக நின்றால் எந்தத் தொழிலாக இருந்தாலும், நமக்கான இடம் கௌவரமாகக் கிடைத்தே தீரும்.

எந்த மொழியென்றாலும் எனக்கு பிரச்சினை இல்லை. இப்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் "தமிழரசன்' படத்திலும், சிபிராஜுடன் "ரேஞ்சர்' படத்திலும் நடித்து வருகி றேன். காமெடி படமான "ப்ளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இவை தவிர, பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந் திருக்கிறேன்.

தமிழில் இப்போது எனக்கு வாய்ப்புகள் கிடைத்திருப்பதால், மலையாள சினிமாவுக்கு திரும்பும் எண்ணம் இல்லையா என்று கேட்கிறீர்கள். யாராக இருந்தாலும் தாய் மொழியில் நடிக்கும்போது கிடைக்கிற சௌகரியம் வேறு மொழியில் நடிக்கும்போது கிடைப்பதில்லை.

rr

அதற்காக நடிப்புக்கு மொழி எப்போதும் தடையாக இருக்காது. சினிமா பார்ப்பது இன்றைய ஆன்லைன் உலகத்தில் உலகளாவிய பொழுதுபோக்காகி விட்டது. என்னைப் பொருத்த மட்டில் எனது நடிப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கவேண்டும். தமிழில் சில நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் இங்கேயே தங்கியிருக்கிறேன். மலையாளத்தில் நல்லதோர் வாய்ப்பு கிடைத்தால் அதைச் செய்யவும் தயங்கமாட்டேன்.

திரையுலகில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்கவேண்டும். அவர்கள் பயமில்லாமல் தொழிலைச் செய்ய வேண்டும். திரையுலகில் நிலவிய பாதுகாப்பற்ற தன்மை இப்போது குறைந்திருக்கிறது. இளம்படைப் பாளிகளுடன் நான் நடிக்கிறேன்.

அவர்களுடன் நடிக்கும்போது நல்லதோர் சூழ்நிலையை உணர் கிறேன். நடிகைகள் நடிக்கும்போது சுதந்திரமாகவும், மனஅமைதியை யும் உணரவேண்டும்'' என்கிறார் ரம்யா நம்பீசன்.

cini250220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe