"உன்னுடைய பழைய வாழ்க்கையைப் பத்தி நான் எதுவும் நினைக்க மாட்டேன்.
அதேமாதிரி என்னோட பழைய வாழ்க்கையைப் பத்தி நீ எதுவும் மனசுல வச்சுக்காத. இனிமே நாம ரெண்டுபேரும் சேர்ந்துவாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையை மட்டும் மனசுல பதிய வச்சு வாழ்ந்தா காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும். நம்ம கல்யாணத்துக்குப்பிறகு எனக்கு நீயும், உனக்கு நானும் உண்மையா இருந்து ஒற்றுமையா வாழ்வோம்'' இப்படியெல்லாம் வாய்மொழி உறுதி ஏற்று நடிகையை நடிகரும், நடிகரை நடிகையும் திருமணம் செய்துகொள்வார்கள். இது பெரிய திரையான சினிமாவிலும் சின்னத்திரையான சீரியல் நடிகர்- நடிகைகளின் வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று.
அந்த வாய்மொழி உறுதியை இருவரும் இறுதிவரைக் கடைப்பிடிக்கும்வரை, அவர்களின் இல்லற வாழ்க்கை யில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் ஒருவர்மீது ஒருவர் சந்தேகப்பட ஆரம்பிக்கும் போதுதான் பூகம்பம் வெடித்து, அவர்களின் இல்லற வாழ்வுக்கே வெடிவைக்கிறது. அதேபோல் தனக்கு மனைவியான பின்பும், நடிகையின் சொத்துகளை சூறையாட கணவர் நடிகர் நினைக்கும்போதும், வெறுப்படையும் நடிகைகள், விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுகிறார்கள், இல்லை யென்றால், விரக்தியின் விளிம்பிற்கே சென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
சிறந்த நடிகையாக சீரும் சிறப்புமாக வரவேண்டி

சிறந்த நடிகையாக சீரும் சிறப்புமாக வரவேண்டிய ஷோபனா, புகழ்பெற்ற டைரக்டர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை செய்து கொண்டார்.
கே. பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணா திடீரென தற்கொலை செய்துகொண்டு சினிமா உலகத்தையே அதிரவைத்தார். பிரவீணாவின் தற்கொலையில் சாரி...மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்போதே பேச்சு ஓடியது.
"முள்ளும் மலரும்', "ஆறிலிருந்து அறுபது வரை' போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் "படாபட்' ஜெயலட்சுமி. எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகன் சுகுமாரைத் தீவிரமாகக் காதலித்தார். சுகுமாரும் அதிதீவிரமாகக் காதலித்துவிட்டு, கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதால் விரக்தியாகி தற்கொலை செய்துகொண்டார் "படாபட்' ஜெயலட்சுமி.
80-களிலும், 90-களிலும் தமிழ் சினிமாவையே தனது காந்தக் கண்களாலும் இடுப்பழகாலும் வசீகரித்த சில்க் ஸ்மிதாவின் தற்கொலை இந்திய சினிமாவையே அதிரவைத்தது. தாடிக்கார கிழவரிடமும் அவரது மகனிடமும் மாட்டிக்கொண்டு, சில்க் பட்டபாடு பெரும்பாடு. வேறு எந்த நடிகையும் சில்க் அளவுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள். சில்க் தற்கொலை செய்துகொண்ட அன்று, சென்னை வடபழனியிலுள்ள அவரது வீட்டிற்கு மக்கள் வெள்ளம் படையெடுத்தது.
நம்ம ஊர் முரளி, சத்யராஜ் ஆகியோருடன் ஜோடிபோட்ட பிதியுஷா, ஆந்திர தொழிலதிபரைக் காதலித்து கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்தார். மகள் கல்யாணம் செய்துகொண்டுபோனால், தங்களது பிழைப்பில் மண் விழுந்துவிடும் என நினைத்த பெற்றோரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டார் பிரதியுஷா.
"பார்வை ஒன்றே போதுமே', "சார்லி சாப்ளின்' போன்ற படங்களில் குணாலுக்கு ஜோடியாக, பிரபுதேவாவின் கார்ல் கேர்ளாக நடித்த மோனல் தற்கொலைக்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை.
நடிகை களின் தற்கொலை விவகாரம் இப்படியென் றால், விவாக ரத்து விவகாரம் வேறுமாதிரி இருக்கிறது.
உதவி இயக்குநராக இருந்தபோதே ஹீரோயின் நளினியை தனக்குள் காதலிக்க ஆரம்பித்து, இயக்குநரானதும் வெளிப்படையாகச் சொல்லி, புகழ்பெற்ற ஹீரோ ஆனவுடன் திருமணமும் செய்து கொண்டார் ராமராஜன். திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் நளினியின் நடவடிக்கைகள் மாறாததால் மனம் வெறுத்துப்போய் விவாகரத்து செய்துகொண்டார் ராமராஜன்.
அதேபோல்தான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, தனது பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடியும், தான் சம்பாதித்த சொத்துகளை அபகரித்தும் திருட் டுத்தனம் பண்ணிய தால், சொந்த பெற்றோர்களையே வெறுத்து, ஆந்திரத் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் பானுப்ரியா.
வாழ்க்கை கொடுப்பதாகக் கூறிக்கொண்டு வந்த தொழிலதிபர் மகராசனும் தன் பங்குக்கு, பானுப்ரியாவின் சொத்துக்கள்மீது குறி வைத்தார். "அட போங்கடா நீங்களும்... ஒங்க கல்யாணமும்' என விரக்தியான பானுப்ரியா, தொழிலதிப திமிங்கலத்திடமிருந்து தப்பி வந்தார். இங்கே சென்னையில் பானுப்ரியாவுக்குப் பாதுகாப்பான வீடு கிடைக் காததால், தங்களது ஸ்டுடியோவிலேயே ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுத் தது ஏவிஎம் நிறுவனம்.
அப்போது ஏவிஎம் தயாரித்த டி.வி. சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்ததால், பானுப்ரியாவுக்கும் பாதுகாப்பாக இருந்தது.
அப்படி கஷ்டப்பட்ட பானுப்ரியாதான் தன் வீட்டில் வேலை பார்க்கும் சிறுமியை தனது மேனேஜருடன்(?!) சேர்ந்துகொண்டு கொடுமைப்படுத்தியதாக பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரானது.
அந்த கேஸின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாது.
தனது முதல்படமான "புதிய பாதை'-யில் ஜோடியாக நடித்த சீதாவிடம் காதல் பாதை போட்டு, கல்யாணம் என்னும் ஊருக்கு வந்தார் ரா. பார்த்திபன். ஒரு பெண், ஒரு ஆண், தத்தெடுத்த ஒரு ஆண் குழந்தை என பார்த்திபன்- சீதா தம்பதிகளின் இல்லறம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சீதா ரிவர்ஸ் கியர் போட ஆரம்பித்ததும், பார்த்திபன் டாப்கியருக்குப் போய் விவாகரத்து பண்ணும் அளவுக்கு ஆகிவிட்டது. ஆனாலும் அசராத சீதா, டி.வி. சீரியல் நடிகர் ஒருவருடன் கோயிங் ஸ்டெடி ஸ்டைலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னை மாநகரில் இருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் ஆதரவும் அரவணைப்பும் சீதாவிற்கு இருப்பதால், எந்த கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதேபோல் மலையாள ஹீரோ திலீப்பைத் திருமணம் செய்து, பத்து வருடங்கள் கழித்து விவாகரத்து செய்தார் ஹீரோயின் மஞ்சுவாரியர். சமீபத்தில் செம ஹிட்டடித்த "அசுரன்' மூலம் தமிழ் சினிமாவிற்குள் ஸ்ட்ராங் பண்ண நினைக்கும் மஞ்சுவாரியருக்கு, சில இளம் ஹீரோக்கள் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருக்கி றார்கள்.
மலையாள நடிகை லிசியின் கதையும் இதேதான். மலையாளத்தில் புகழ்பெற்ற டைரக்டரான பிரியதர்ஷனை ஆசை ஆசையாய்த் திருமணம் செய்து அழகான பெண் குழந்தையும் பெற்றார்.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என வளர்ந்த அந்தப் பெண் குழந்தைதான் இப்போது ரீலீசான "ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். சுமார் இருபது ஆண்டுகள் இன்பமாகப் போய்க் கொண்டிருந்த இல்லற வாழ்க்கை கசந்து, பிரியதர்ஷனும் லிசியும் விவாகரத்து செய்துகொண்டார்கள். சென்னை நுங்கம்பாக்கத் தில் இருக்கும் லி மேஜிக் லேண்டர்ன் பிரிவியூ தியேட்டரையும், டப்பிங் ஸ்டுடியோவையும் மிகச் சிறப்பாக நடத்திவருகிறார் லிசி.
-ஈ.பா. பரமேஷ்வரன்