Advertisment

ஒரு டைரக்டரின் தற்கொலை மிரட்டல்!

/idhalgal/cinikkuttu/directors-suicide-threat

டைரக்டர் கௌதம் மேனனின் சினிமா கிராஃப் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. "நடுநிசி நாய்கள்'னு சொந்தப்படம் ஒண்ணு எடுத்து ரிலீஸ் பண்ணிய பிறகுதான் கௌதம் மேனனின் நிலைமையே தலைகீழாப் போச்சு.

Advertisment

d

ஆனாலும், சிம்புவை வச்சு "விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற ஹிட் படம் கொடுத்தாரு. படம் ஹிட்டுங்கிறது வெள

டைரக்டர் கௌதம் மேனனின் சினிமா கிராஃப் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு. "நடுநிசி நாய்கள்'னு சொந்தப்படம் ஒண்ணு எடுத்து ரிலீஸ் பண்ணிய பிறகுதான் கௌதம் மேனனின் நிலைமையே தலைகீழாப் போச்சு.

Advertisment

d

ஆனாலும், சிம்புவை வச்சு "விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற ஹிட் படம் கொடுத்தாரு. படம் ஹிட்டுங்கிறது வெளியில பரவிய நியூஸ். ஆனால், கௌதம் மேனனின் பழைய படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை வி.தா.வ.வில் சரிக்கட்டிவிட்டார்கள் விநியோகஸ்தர்கள்.

Advertisment

அதன்பின் கௌதம் மேனனுக்கு எல்லாமே தடுமாற்றம்தான். விக்ரமை வச்சு "துருவ நட்சத்திரம்' என்ற படத்தை ஸ்டார்ட் பண்ணினார். பாதியுடன் நிற்கிறது. தனுஷ்- மேகா ஆகாஷ் காம்பினேஷனில் "என்னை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தை ஆரம்பித்து அதுவும் பாதியில் நிற்கிறது.

d

இதற்கிடையில் கார்த்திக் நரேன் என்ற இளம் இயக்குநர் அரவிந்த் சாமி- ஸ்ரேயா காம்பினேஷனில் "நரகாசூரன்' என்ற படத்தைத் தயாரித்து படமும் முக்கால்வாசி போய்க்கொண்டிருந்தபோது, படத்தை எனது பேனரில் ரிலீஸ் பண்ணுகிறேன் எனச் சொல்லி அக்ரிமென்ட் போட்டார் கௌதம். ஏகப்பட்ட கடன் நொம்பலத்தில் கௌதம் இருப்பது தெரியாமல், மாட்டிக்கொண்டார் கார்த்திக் நரேன். அந்த அக்ரிமென்டைக் காட்டி பலரிடம் கடன் வாங்கினார்

கௌதம். இப்போது "நரகாசூர'னும் நட்டாற்றில் நிற்கிறார்.

இப்படி பல வழிகளி லும் கௌதம் மேனன் வாங்கிய கடன் தொகை 50 கோடியை நெருங்கிவிட்டதாம். கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால் ""என்னை டார்ச்சர் பண்ணினால், உங்க பேரையெல்லாம் எழுதி வச்சுட்டு தற்கொலை பண்ணிக்குவேன்'' என மிரட்டுகிறாராம் கௌதம் மேனன்.

இந்த லட்சணத்துல ""ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை வெப்சீரியலா எடுக்கப்போறேன்.

ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்கப் போறார்னு கிளப்பிவிட்டார் கௌதம்.

cine300419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe