பொதுவாகவே சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் கைகளில் காசு கொஞ்சம் கூடுதலாக புரண்டால், சினிமா எடுக்கும் ஆசை வந்துவிடும். அந்த நாடுகளில் படம் எடுத்தால் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்பதால், நேராக கோடம்பாக்கம் வந்திறங்குவார்கள்.

இங்குள்ள சினிமா மீடியேட்டர் களைப் பிடித்து கில்டிலோ, தயாரிப்பாளர்கள் கவுன்சிலிலிலோ கம்பெனி பேரைப் பதிவு செய்வார்கள், ஆபீஸ் போடுவார்கள். வெளிநாட்டுப் பார்ட்டிகள் என்பதால் மீடியேட்டர்கள் கூட்டமும் அவர்களை மொய்க்கும். அதன் பின் தங்களுக்குத் தோதான டைரக்டர்களைப் போட்டு, புதுமுக ஹீரோ, ஹீரோயின்களை வைத்து ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிவிடுவார்கள். அந்தப் படங்களின் ஆடியோ, டிரைலர் ரிலீசாகும், படமும் ரிலீசாகும். ஆனால் படத்தின் ரிசல்ட் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ஃப்ளைட் ஏறி, அவர்கள் பிழைப்பு நடத்தும் நாட்டிற்குப் போய்விடுவார்கள்.

d

இப்படித்தான் கதை- திரைக்கதை- வசனம்- பாடல்கள்- இசை- ஒளிப்பதிவு- எடிட்டிங் என சகல வித்தை களுடனும் "அமெரிக்க டி.ஆர்.' என்ற அடைமொழியுடனும் அமெரிக்காவிலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்தார் ஆரோக்கியசாமி க்ளெமெண்ட் என்ற தமிழர். ஆரோக்கியசாமி அமெரிக்காவில் கால்டாக்சி ஓட்டுபவர். அவரது மனைவி சாஃப்ட்வேர் என்ஜினியர். "முடிவில்லா புன்னகை' என்ற படத்தையும் எடுத்தார். இந்த ஆரோக்கியசாமிக்கு ஃபேஸ்புக் நண்பரானார் டைரக்டர் வேலுபிரபாகரனின் மாஜி மனைவியும் டைரக்டருமான ஜெயதேவி.

நட்பு வளர்த்து நட்பு வளர்த்து ஆரோக்கிய சாமிக்கு கொக்கி போட்டார்.

""கவலையேபடாதீங்க. ஒங்க படத்த 40 தியேட்டர்ல நான் ரிலீஸ் பண்ணித்தர்றேன். என்னோட பழைய ஹஸ்பெண்ட் வேலு பிரபாகரனுக்கு வியாபார நுணுக்கம் தெரியும். சென்னையில ஆடியோ மற்றும் டீசர் ரிலீஸ் ஃபங்ஷன் வச்சாத்தான் படத்தைப் பத்தி தெரியும். அந்த ஃபங்ஷனுக்கு மாஜி கணவர் வேலுபிரபாகரன், நடிகை கஸ்தூரி இன்னும் சில பிரபலங்களை கூட்டி வருவதற்கு நானாச்சு...'' என்று ஜெயதேவி, தேனொழுகப் பேசியதும் ஒப்புக்கொண்டார் ஆரோக்கியசாமி க்ளெமெண்ட்.

அந்தச் செலவு, இந்தச் செலவு என க்ளமெண்டிடம் பத்து லட்ச ரூபாய் அமௌண்டை கலெக்ஷன் பண்ணிவிட்டாராம் ஜெயதேவி. ஆனா படம் ரிலீசானதோ ரெண்டே தியேட்டர்ல! அதுவும் ரெண்டே ஷோதான்! ரிலீஸ் விளம்பரத்துல டெக்னீஷி யன்கள் பெயரை போடாம விட்டதோடு, "பட ரிலீசுக்கு உதவிபண்ணிய ஜெயதேவிக்கு நன்றி'ன்னு க்ளமெண்ட் போட்டாரு பாருங்க ஒரு போடு, அங்கதான் இருக்கு ட்விஸ்டே. மொத்தத்துல க்ளமெண்டுக்கு 40 லட்ச ரூபாய் அவுட்.