Advertisment

என்னை தயார்படுத்திய டைரக்டர்! -மஹிமா நம்பியார் ஓப்பன் டாக்!

/idhalgal/cinikkuttu/director-who-prepared-me-mahima-nambiar-open-talk

"மகாமுனி' படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமா வில் ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத் தோடு உலாவரும் அளவிற்கு "மகாமுனி' படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்வி களுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார் மஹிமா.

Advertisment

சினிமா ஆர்வம் எப்படி வந்தது?

அதுதான் எனக்கே தெரியவில்லை! எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயதுமுதலே நடிப்பின்மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம். நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்

"மகாமுனி' படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். தென்னிந்திய சினிமா வில் ஒரு நல்ல நடிகை என்ற அடையாளத் தோடு உலாவரும் அளவிற்கு "மகாமுனி' படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சந்தோஷத்தோடு நமது கேள்வி களுக்கு மிக இயல்பாக பதில் அளித்தார் மஹிமா.

Advertisment

சினிமா ஆர்வம் எப்படி வந்தது?

அதுதான் எனக்கே தெரியவில்லை! எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயதுமுதலே நடிப்பின்மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம். நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்.

Advertisment

nnaag

முதல்பட அனுபவம்...?

எப்படியாவது நடிகையாக வேண்டுமென்ற ஆர்வத்தில் தினமும் வீட்டில் கண்ணாடிமுன்பு நின்று நடித்துப் பார்ப்பேன். திரைப்பட வசனங்களை மனப் பாடம் செய்து பேசுவேன். ஆனால் சினிமாவில் நடிகையாக எப்படி முயற்சி செய்யவேண்டுமென்று தெரியாது. ஒருமுறை கேரளா விற்கு லொக்கேஷன் பார்க்க வந்த இயக்குநர் சாமி சார் கண்ணில் நான் படவும், "சிந்துசமவெளி' படத்தில் ஒரு சிஸ்டர் கேரக்ட ருக்கு என்னை நடிக்க அழைத்தார்.

என் பள்ளிப்படிப்பு காரண மாக அப்படத்தில் நடிக்க இயல வில்லை. ஆனால் அப்போது அவர் மூலமாக என் போட்டோ இயக் குநர் அன்பழகன் கண்களில் பட, வந்த வாய்ப்புதான் "சாட்டை' படம். தமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். தமிழ் தெரியவில்லை என்பதற்காக எல்லாரும் என்னை கிண்டல் செய்தார்கள். நான் அப்போது எப்படியாவது இந்தப்படம் முடிவதற்குள் தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை உடன் நடிக்கும் மாணவிகள் துணையோடு சிறப்பாக நிறைவேறியது. தமிழில் முதல் பட அனு பவமே எனக்கு தமிழை நன்றாகக் கற்றுக்கொடுத்துவிட்டது. தமிழைக் கற்றபிறகு அம்மொழி மீது அதிக காதல் வந்துவிட்டது.

"மகாமுனி' அனுபவம் பற்றி...

என் வாழ்க்கையில் மிக முக்கிய மான படமாக அமைந்துவிட்டது "மகாமுனி'. எனக்குப் படத்தின் கதையே தெரியாது. "மௌனகுரு' பட இயக்குநர் சாந்தகுமார் என்றதும் வேறு கேள்வியே கேட்கத் தோன்றவில்லை. என்னை ஸ்கீரினில் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது! அது இயக்குநர் சாந்தகுமார் சார் செய்த மேஜிக்.

படத்தில் உங்கள் கதா பாத்திரம் பேசிய வசனங்கள் எல்லாம் மிகவும் காத்திர மான வசனங்கள். நீங்களே சொந்தமாக டப்பிங் பேசும் போது எப்படியிருந்தது?

டப்பிங் பேசும்போது எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது. நான் சாந்தகுமார் சாரிடம் "என் வாய்ஸ் வேண்டாம்' என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாகப் பேசச் சொன்னார். அவரின் நம்பிக்கை நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள் ளது. இதைப்போல' நடிக்கும் போதும் சாந்தகுமார் நம்மை உளவியல்ரீதியாக தயார்படுத்து வார்.

நடிகர் ஆர்யாவுடன் முதல் படம் இது. ஆர்யா உங்களுக்கு உதவியாக இருந்தாரா?

ஆர்யாபோல ஒரு அபூர்வ நடிகரைப் பார்க்கவே முடியாது. அவர் மிகமிகப் பிரண்ட்லியான மனிதர். படப்பிடிப்பில் அவர் என்னிடம் அப்படி நடிங்க இப்படி நடிங்க என்று எதுவும் சொல்லமாட்டார். ஆனால் எனது நடிப்பும் நல்லா வரணும் என்று மெனக்கெடுவார்.''

"மகாமுனி' படத்திற்காக உங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு எது?

எங்கள் இயக்குநர் சாந்த குமார் சார் எடிட்டிங்கில் இருக் கும்போது என்னிடம், ""நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல'' என்று சொன்னார். எனக்கு லைப் லாங் மறக்கமுடியாத பாராட்டு அது.

சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?

எல்லா நடிகர்களும் பிடித்த நடிகர்கள்தான். ரஜினி சாரை கூடுதலாகப் பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா ரொம்பப் பிடிக்கும்.''

cini240919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe