தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பின்பு நடிகராக ஜொலித்த வர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என நிறையபேர் இருக் கிறார்கள். அந்தவரிசையில் இப்போது இயக்குநர் மற்றும் நடிகர் குட்டிபுலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின்மூலம் இயக்குநராக அடி யெடுத்து வைத்தவர் சரவண சக்தி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/director_8.jpg)
அந்தப் படம் இவருக்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்ததுடன், நல்ல இயக்குநர் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. அதன்பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு, சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த "குட்டி புலி' படத்தில், இயக்குநர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து "மருது', "சண்டக்கோழி-2', "கொடிவீரன்', "தர்மதுரை' போன்ற படங்களில் அசத்தியவர், தற்போது "மாமனிதன்', "ரண சிங்கம்', அடுத்த "சாட்டை', "வால்ட்டர்' என 25 படங் களுக்கும்மேல் நடித்துவருகிறார்.
எனினும், தன்னுள் உள்ள இயக்குநர் என்ற படைப்பாளன் இவரை விடாது துரத்தவே, த.ஃ சுரேஷ் நடிப்பில் "பில்லா பாண்டி' படத்தை இயக்கினார்.
இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துவரும் இவர், விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/director-t.jpg)