Advertisment

டைரக்டரின் தில்லாலங்கடி! தயாரிப்பாளர் நெத்தியடி!

/idhalgal/cinikkuttu/director-dillalangady-producer-nettiadi

மிழ் சினிமாவில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் "வால்டர்' என்கிற படத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக

மிழ் சினிமாவில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் சிங்காரவேலன். இவர் தற்போது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் "வால்டர்' என்கிற படத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விக்ரம் பிரபு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை இயக்குநர் அன்பரசன் இயக்கவுள்ளார்.

Advertisment

hh

இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம்மேனன், சமுத்திரகனி, ஹீரோயினாக ஷ்ரின் கஞ்வாலா ஆகியோர் நடிப்பில் இதே கதையை "வால்டர்' என்கிற தலைப்பிலேயே படமாகத் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி, படத்திற்கான பூஜையும் போடப்பட்டு, அந்த புகைப்படங்களும் அது குறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன.

இதனைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். "" "வால்டர்' படத்தின் கதையும் படத்தின் தலைப்பும் என்வசமே இருக்கிறது.

இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதியில்லாமல் தயாரிக்க முற்பட்டால் சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்மீது காப்பிரைட் சட்டத்தின்கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார் சிங்காரவேலன்.

ஒரு டைரக்டர், ரெண்டு தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டிட்டாரே, செம தில்லாலங்கடி பார்ட்டியா இருக்காரே.

Advertisment
cine020719
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe