பி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர் .டி தயாரித்திருக்கும் படம் "யாளி.'

Advertisment

இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

Advertisment

akshaya

இந்த அக்ஷயா, ஆர்யா நடித்த "கலாபக் காதலனி'-ல் மச்சானை விரகதாபத்தில் விரட்டி விரட்டி மயக்கும் மச்சினியாக நடித்தவர். இவர் விஜயகாந்த் நடித்த "எங்கள் ஆசான்', கலைஞர் கதை, வசனம் எழுதிய "உளியின் ஓசை' போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறும்போது-

""இதை ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி திரைக்கதை நகரும். விறுவிறுப்பான திரைக்கதை ரசிக்கும்படி யாக இருக்கும். ஜூலை மாதம் படம் திரைக்கு வர உள்ளது'' என்கிறார்.