Advertisment

இது வேற லெவல்'' -ஜாக்கி ஷெராப்!

/idhalgal/cinikkuttu/different-level-jackie-shroff

ஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் "பாண்டி முனி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisment

எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டி ருந்த ஜாக்கியை மடக்கி பேசினோம்.

""டைரக்டர் கஸ்தூரி ராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புதுமாதிரியா

ஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் "பாண்டி முனி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisment

எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டி ருந்த ஜாக்கியை மடக்கி பேசினோம்.

""டைரக்டர் கஸ்தூரி ராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புதுமாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன். ஆரண்ய காண்டம் மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம்.என் உருவத்தை மட்டும் அல்ல; என் நடை, உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்..

Advertisment

Jackie Shroff

டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன்.

நானாவது இந்த கதை யில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குநர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்.

சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக் கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட் டம் தான் கதை.

அகோரி என்றால் ஆ...ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல.

அமைதியால் எதையும் வெல்லமுடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம்.

80-ஆம் வருட நடிகர்- நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன்.

ஒவ்வொரு நடிகர்- நடிகை களும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி, சாம்பார், ரசம் என்று எடுத்துவந்து பரிமாறி அசத்திவிடுவார்கள்.ரேவதி, ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.

என்னைப் பொருத்தவரை இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் தான் என் எஜமானர்கள்.

ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை, சாப்பாடு கொடுக்கிற அவங்களை என்றைக்கும் நான் மறக்கமாட்டேன்'' என்றார் ஜாக்கி ஷெராப்.

cine120219
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe