ரஜினியின் "காலா'வால் சில கஷ்டங்கள் வந்தபோது தனுஷுக்கு கைகொடுத்தவர் கலைப்புலி தாணு. அந்த நன்றிக்காகத்தான், தாணுவுக்கு ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார் தனுஷ். வெற்றிமாறன் டைரக்ஷனில் "அசுரன்' படம் தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, மஞ்சு வாரியரின் போர்ஷன் பாதி முடிந்த நிலையில், தேர்தல் வந்தது. இப்போது தேர்தல் பறக்கும் படையினர் ஆனானப் பட்டவர்களையே பாடாய்படுத்துவதைப் பார்த்து "அசுரன்' ஷூட்டிங்கிற்கு பிரேக்விடலாம் எனச் சொல்லிலிவிட்டாராம் தனுஷ்.
ஆனால் சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், துரை செந்தில்குமார் டைரக்ஷனில், தனுஷுக்கு சினேகா ஜோடி போடும் படத்தின் ஷூட்டிங் மட்டும் குற்றாலம் ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்துமுடிந்ததால், இது மட்டும் எப்படி என உறுமிக்கொண்டிருக்காராம் புலி.