சமீபத்தில் வெளியான "சந்தோஷத்தில் கலவரம்' படத்தில் வித்தியாசமான நாயகன் பாத்திரத்தில் அறிமு கமாகியுள்ளவர் நடிகர் நிரந்த்.
"லைப் பூ சூப்பர்' என்கிற கன்னட படத்தில் அறிமுகமானவர். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி யவரின் நடை, உடை, பாவனைகள் பிடித்துப்போய் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி இவரை நடிகராக்கிவிட்டார். அந்தப் படம்தான் "லைப் பூ சூப்பர்.' அப்படத்தில் நிரந்தின் நடிப்பைப் பார்த்த அதே திம்மா ரெட்டிதான் தமிழில் படம் தயாரிக்க முடிவு செய்தபோது இவரையே முக்கிய நாயகன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் .
தமிழில் நாயகனாக அறிமுகமாவது பற்றி நிரந்த் கூறும்போது, ""தமிழ்ச் சினிமா ரசிகர்கள் தோற்றத்தைவிட திறமையை வரவேற்பவர்கள்; ஆராதிப்பவர்கள். அந்த நம்பிக் கையில்தான் நான் தமிழில் நடிக்க சந்தோஷமாக சம்மதித்தேன். திறமைக்கு மரியாதை தரும் தமிழில் தடம் பதிக்க எனக்கு ஆசை.
நான் இயக்குநரின் நடிகன் என்றிருக்கவே விரும்புகிறேன்'' என்கிற நிரந்த்துக்குச் சொந்த ஊர் பெங்களூரு. இரண்டாவது படமாக நிரந்த் நடித்த கன்னடப் படம் "கார்ணி' வெளியாகிவிட்டது. நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/neerath.jpg)