Advertisment

தன்ஷிகா செம குஷி!

/idhalgal/cinikkuttu/danshika-seema-khushi

"சினம்' என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் "சினம்' குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது "சினம்.' சிறந்த நடிகைக்கான விருத

"சினம்' என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் "சினம்' குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது "சினம்.' சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு பேசத் தொடங்கினோம்.

Advertisment

danshika

""நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்கும் அந்த தருணம்தான் அனைத்து நடிகைகளுக் கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மை யில் ஏற்பட்டது.

தெலுங்குத் திரையுல கில் பிரபலமான கதாசிரியர் கிரண்.

அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து "மேளா' என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார். இந்தக் கதையின் மூலமாகத்தான் நான் இயக்குநராக அறிமுக மாகிறேன். இது கதையின் நாயகியை மையப் படுத்திய திரைக்கதை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழுக்கதையையும் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு நான் பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்தக் கதை என்னைக் கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.'

Advertisment

danshika

படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன்.

எனக்கு ஜோடி என்று யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதையைக் கேட்டபோதே நான் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இந்தப் படத்தில் இடம்பெறும் அழகான பாடல் காட்சிகளிலும், நடன இயக்குநர் சந்திர கிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்குமேல் ஒத்திகைப் பார்த்து ஆடியிருக்கிறேன்.

"மேளா' நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்தப் படம் ஒரேசமயத்தில் வெளியாகவிருக்கிறது'' என செமகுஷியாகச் சொன்னார் தன்ஷிகா.

அதான் சன் டி.வி.யின் "சிங்கர்' புரோகிராமில் செம தூக்க லான காஸ்ட்யூமில் வந்து கலக்குனாரோ தன்ஷிகா. நீ கலக்கு தாயி...

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe