பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் "கவச்சம்.' இப்படத்தின் படப்பிடிப்பில் காஜலுக்கும், "நோட்டா' படத்தில் நடித்த மெஹரீனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாகவும், பாடல்களைப் படமாக்க படக்குழு துபாய்க்குச் சென்றபோது மெஹ்ரீனின் பகுதியைப் படமாக்கும்வரை நான் துபாய்க்கு வரமாட்டேன் என்று காஜல் அடம்பிடித்துள்ளதாகவும் கூறப் படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gajal.jpg)
மேலும் "கவச்சம்' விளம்பர நிகழ்ச்சிகளுக்கு மெஹ்ரீன் வந்தால் நான் வரமாட்டேன் என்றும் காஜல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் காஜலுடன் கொண்ட பிரச்சினையின் காரணமாக "கவச்சம்' இசை வெளியீட்டு விழாவுக்கு மெஹ்ரீன் வரவில்லை என சமீபத்தில் கூறப் பட்டதையடுத்து மெஹரீன் விளக்கமளித்துள்ளார். அதில்...
""தனக்கு படப்பிடிப்பு இருந்ததால் "கவச்சம்' இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று மெஹ்ரீன் சமூக வலைத்தளத்தில் விளக்கியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/gajal-t.jpg)