Advertisment

டான்ஸ் நடிகரின் நரித்தனம்!

/idhalgal/cinikkuttu/dance-actor-actor

தெலுங்குப் பட உலகில் கிளப்பிய புயலைத் தொடர்ந்து சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள்மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறினார் நடிகை ஸ்ரீரெட்டி. "தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், தான் ஏற்பாடு செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஸ்ரீரெட்டி அனைவரின் முன் நடித்தும், நடனமாடியும் தன்னை நிரூபித்தால், தான் அடுத்து இயக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Advertisment

sreereddy

இதுகுறித்து ஸ்ரீரெட்டியிடம் நாம் கேட்டபோது, ""நான் எந்தப் பட

தெலுங்குப் பட உலகில் கிளப்பிய புயலைத் தொடர்ந்து சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள்மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறினார் நடிகை ஸ்ரீரெட்டி. "தமிழ் லீக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், தான் ஏற்பாடு செய்யும் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஸ்ரீரெட்டி அனைவரின் முன் நடித்தும், நடனமாடியும் தன்னை நிரூபித்தால், தான் அடுத்து இயக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Advertisment

sreereddy

இதுகுறித்து ஸ்ரீரெட்டியிடம் நாம் கேட்டபோது, ""நான் எந்தப் படம் என்று சொல்வதற்குமுன் அது "ரிபெல்' படம் என்று லாரன்சிற்கு எப்படி தெரியும்? இதில் இருந்தே தெரியவில்லையா அவருக்கு இதில் சம்பந்தம் உள்ளதா, இல்லையா என்று. மேலும் அவர் தங்கியிருந்த கோல்கொண்டா ஹோட்டல் ஊழியர்களையும், படக்குழுவினரையும் கேட்டாலே தெரியும்.

அவர் அறையில் ருத்ராட்ச மாலையும், குரு ராகவேந்திரா சாமிகள் படமும் இருந்ததா இல்லையா, என்று. அது மட்டுமில்லாமல்; என்னோடு சேர்ந்து என் தோழியையும் லாரன்ஸ் பயன்படுத்திக்கொண்டார். அவர் கூறியதுபோல் பிரஸ் மீட் வைக்கும்பட்சத்தில் அதில் என் தோழியும் கலந்துகொண்டு இன்னும் தெளிவுபடுத்துவார். எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு தெரியும் லாரன்ஸ் தவறு செய்தாரா இல்லையா என்று. ஒரு நாள் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் என் நடிப்புத் திறமையைப் பற்றிப் பேசியதற்கும், வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னதற்கும் அவரை பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிரஸ் மீட்டில் நடிக்க வேண்டும் அவர் கூறியதை சவாலாக ஏற்கிறேன். பிரெஸ் மீட்டிற்கு நான் ரெடி. அவர் ரெடியா..?"" என்று சவால்விட்டார்.

இந்தப் பேட்டியை நக்கீரன் வலைத்தளத்திலும் நக்கீரன் ஸ்டுடியோ (NAKKHEERAN STUDIO) யூ-டியூப் சேனலிலும் வெளியிட்டிருந்தோம்.

Advertisment

lawrance

இதைப் பார்த்த ராகவா லாரன்ஸ் நம்மை அவசரம் அவசரமாகத் தொடர்புகொண்டு, ""ஸ்ரீரெட்டி கூறியது எதுவும் உண்மையில்லை. என்னை அசிங்கப்படுத்தவே இதைச் செய்கிறார். நீங்கள் அந்தப் பேட்டியை தயவுசெய்து நீக்க வேண்டும். இதனால், என் நன்மதிப்புக்கும் நான் செய்துவரும் நற்காரியங்களுக்கும் அவப்பெயர் ஏற்படும். எங்கள் ட்ரஸ்ட் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்"" என்று தன் உதவியாளர் மூலம் சென்டிமென்ட் கோரிக்கை வைத்தார். ""பேட்டியை நீக்குவது சரியாகாது. உங்கள் மறுப்பை ஒரு பேட்டிமூலம் கொடுங்கள். வெளியிடுகிறோம்'' என்றோம். ""சரி, நான் பேட்டி தருகிறேன், அனைத்தையும் சொல்கிறேன். ஆனால், ஸ்ரீரெட்டியின் பேட்டியை நீங்கள் நீக்க வேண்டும். அது என் ட்ரஸ்ட்க்கு பாதிப்பு'' என்று மீண்டும் மீண்டும் அந்த அஸ்திரத்தையே எடுத்தார். சரி, நற்காரியத் தைக் குறிப்பிட்டு கேட்கிறார்.

மறுக்கமுடியாது என்பதால், ஒப்புக்கொண்டோம். முதலில் தனது வீட்டில் பேட்டியை வைத்துக் கொள்ளலாம் என்றவர், கடைசி நேரத்தில் அசோக் நகரில் உள்ள ட்ரஸ்ட் அலுவலகத்தில் வைத்துக் கொள்ளலாம் என்றார். நமக்கு சின்ன சந்தேகம், இருந்தாலும் சரி என்றோம். இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் ஒரு அழைப்பு. ""இதை பொதுவான பேட்டியாக வைத்துக்கொள்ளலாமே... ட்ரஸ்ட் குழந்தைகளும் அதில் கலந்து கொள்ளட்டும். அவர்கள் மகிழ்ச்சி யாய் இருப்பார்கள். ஸ்ரீரெட்டி விஷயம் குறித்துப் பேசவேண்டாம்'' என்றார். சந்தேகம் உறுதியானது.

குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா நமக்குத் தெரியாது.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டு களுக்கு எதிராக குழந்தைகளைக் கேடயமாகப் பயன்படுத்துவது நரித்தனம் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது நற்பணிகள் மறுக்க முடியாததுதான். ஆனால், ஸ்ரீரெட்டி வைத்திருக்கும் இத்தகைய பரபரப்பான ஒரு குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் பேட்டியில் குழந்தைகளை ஏன் பங்கேற்கச் செய்ய நினைத்தார்? ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகளைக் கேட்கும்போது கூட அவையெல்லாம் பொய்யாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. ஆனால், அதில் தொடர்புடையவர்களின் இத்தகைய நடவடிக்கைகள்தான் அவை உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லாம், அந்த ராகவேந்திரா சாமிக்குதான் வெளிச்சம்.

-வசந்த்

cine280818
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe