தெலுங்கில் வெளியாகி, சூப்பர் ஹிட்டான "அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் "ஆதித்ய வர்மா.' சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக கால்பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Advertisment

11

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், ""ஆதித்ய வர்மா'' படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம்போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ஆம் ஆண்டில் விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.''

Advertisment

11கிரிசாயா, ""நான் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால், எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ்த் திரைத்துறையில்தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் எனது நன்றி.''

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், ""துருவ் உடன்பணிபுரிவது சிறப்பாக இருந்தது'' என்றார்.

Advertisment

கதாநாயகி பனிதா, ""விக்ரம் அவர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி'' என்றார்.

""எனது குடும்பத்தினால் தான் நான் இன்று இங்கே இருக் கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.

அப்பாவுக்கு... என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தப் படத்திற்கான அவரது அர்ப் பணிப்பு 100 சதவிகிதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதைவிட, அக்கறையும் அன்பும் அதிகமுள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்'' என நெகிழ்ந்தார் துருவ் விக்ரம்.