யாரிப்பாளர்கள் சங்கத் தின் தலைவராக இராம. நாராயணன் இருந்தவரை கண்ணியமாகவும் நேர்மையாகவும் போய்க் கொண்டிருந்தது சங்கம். அதனால்தான் இரண்டாவது முறையாகவும் இராம. நாராயணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாதவர், தி.மு.க.வின் தீவிர அபிமானி என்றாலும் சங்கத்தில் அரசியலைப் புகுத்தாதவர். இப்படியெல்லாம் இராம. நாராயணனுக்கு நல்ல பேர் உண்டு.

Advertisment

producer-counsil

அதன்பின் சங்கத்தின் தலைவராக கே.ஆர். ஆனதும் தள்ளாட ஆரம்பித்து, தடம்புரள ஆரம்பித்தது சங்கம். கொஞ்சநாட்கள் தலைவராக இருந்தார் விஜய்யின் அப்பா. மறுபடியும் தலைவரானார் கே.ஆர். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த தேர்தலில் ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளிவீசி, தலைவரானார் விஷால். சொன்னது எதையுமே செய்யாதது ஒருபக்கம் என்றால், சொல்லாததையெல்லாம் செய்து முக்கால்வாசி தயாரிப்பாளர்களின் பொல்லாப்பை சம்பாதித்தார்.

rama

Advertisment

ரிலீசிங் கமிட்டியில் ஏகப்பட்ட குழப்பம், அக்கப்போர். அந்தக் கமிட்டியில் இருக்கும் கதிரேசனிடம் சின்ன படங்களின் தயாரிப்பாளர்கள் போனால், ""உப்புமா படத்தை எடுத்துட்டு ஏன்யா உயிரை வாங்குறீங்க'' என எரிந்து விழுவாராம் கதிரேசன். இந்தக் கொடுமையைவிட இன்னொரு கொடுமை கவுன்சில் ஆபீசில் உட்கார்ந்துகொண்டு சிலர் செய்யும் அட்டகாசம்தான். அந்த அட்டகாசத்தைத்தான் கடந்த வாரம் "ஔடதம்' படத்தின் தயாரிப்பாளரான நேதாஜி பிரபு, படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ஓப்பனாக போட்டுடைத்தார். ""படம் எடுக்குறது பிரச்சினையில்ல. அத ரிலீஸ் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துபோகுது. கவுன்சிலிலில் சில விஷக்கிருமிகள் உட்கார்ந்துக்கிட்டு, நாங்க ரிலீஸ் பண்ணித் தர்றோம்னு சொல்லிலிச் சொல்லிலியே டெய்லிலி பத்தாயிரம், இருபதாயிரம் ஆட்டையப் போட்டுத் திங்குறாங்க. என்னோட "ஔடதம்' ரிலீசான பிறகு ஆதாரத்துடன் கவுன்சிலிலின் புகார் செய்வேன். என்னைப்போலவே நொந்து நொம்பலமானவர் "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' படத்தின் தயாரிப்பாளர்'' என வெடித்துக் குமுறிவிட்டார் நேதாஜி பிரபு

இப்பக்கூட "96' ஏகப்பட்ட நொம்பலத்துடன் ரிலீசானது. ""நான் செஸ் காயினாக பயன்படுத்தப்பட்டேன்' என விஜய்சேதுபதி நொந்து புலம்பும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

சங்கத்தோட லட்சணம் இப்படி இருக்கு. அந்த சங்கத்தின் தலைவர் விஷால்தான் "மக்கள்நல இயக்கம்' ஆரம்பிச்சிருக்காரு. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு.