றைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறார். சீக்கிரமே தென்னிந்தியப் படமொன்றிலும் கமிட்டாகிவிடுவார் என்ற தகவல் பரவியது. அதை உறுதிசெய்யும்விதமாக தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய டைரக்டர் பூரி ஜெகநாத், விஜய் தேவாரகொண்டாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் ஜான்விதான் ஹீரோயின் என செய்தி வெளியானது.

Advertisment

uu

ஆனால், மீடியாக்களில் என் மகள் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் போலியானது. அதை நம்பவேணாம். நல்ல கதையம்சமுள்ள படம் வந்தால் அதில் அவர் நிச்சயம் நடிப்பார் என்று அறிக்கை வெளியிட்டார் ஜான்வியின் அப்பா போனி கபூர். ஆனால், பூரி ஜெகநாத்தின் படத்தில் கமிட்டாக இருந்த ஜான்வியை நடிக்கவிடாமல் செய்ததே போனிதானாம். மிகப்பெரிய பட்ஜெட் உள்ள படத்தின்மூலம் தனது மகள் ஜான்வி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக வேண்டுமென்ற காரணத்திற்காக பூரி ஜெகநாத்தின் படத்தைத் தவிர்த்திருக்கிறார் போனி. அப்படியானால், இன்னும் சில ஆண்டுகளுக்கு ஜான்வியை தென்னிந்திய சினிமாவில் பார்க்கவே முடியாதுபோல.