சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவில் ஹிட்டடித்த "காவலுதாரி' படத்தின் தமிழ் பதிப்பு "கபடதாரி' எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமா
சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவில் ஹிட்டடித்த "காவலுதாரி' படத்தின் தமிழ் பதிப்பு "கபடதாரி' எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமா ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்ட தாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக் கதாபாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"கபடதாரி'-யின் நிர்வாக தயாரிப்பாளர் தனஞ்செயன் என்ன சொல்றாருன்னா...
""நடிகை சுமா ரங்கநாதன் எங்கள் படத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி. முன்னதாக நாங்கள் நடிகை பூஜா குமாரை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வுசெய்திருந்தோம். ஆனால், அவரின் அவசரமான அமெரிக்க பயணத்தால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
சுமா பங்குபெறும் பகுதியின் படப் பிடிப்பு முழுதாக முடிந்து விட்டது'' என்றார்.