விக்ரம் நடித்து வெற்றிபெற்ற "ஸ்கெட்ச்' படத்தைத் தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ். பார்த்தி, எஸ்.எஸ். வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் "கள்ளபார்ட்' படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள்.

rajapandi

"என்னமோ நடக்குது', "அச்சமின்றி' போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.

நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார்.

rejina

Advertisment

வசனம்- ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவு- அரவிந்த்கிருஷ்ணா, இசை- - நிவாஸ் கே.பிரசன்னா, கலை- மாயபாண்டி, எடிட்டிங்- இளையராஜா, ஸ்டன்ட்- மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை- வி. ராமச்சந்திரன்.

இந்தப் படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப் பட்டு படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.