டெல்லி ஜே.என்.யூ. மாண வர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, பாலிவுட் நடிகை தீபாவுக்கு ஏகப்பட்ட ப்ரஷர். சமீபத்தில் அவர் நடித்து வெளியான "சப்பாக்' படத்திற்கு ரொம்பவே எதிர்ப்பு கிளம்பியது. படத்தைப் பார்க்காமலே அதற்கு மட்டமான ரேட்டிங் கொடுத்த கொடுமைகள் அரங்கேறின. தீபிகா எதிர்ப்பைக் காட்டுகிறார் என்றால், அது அவரது தனிப்பட்ட விஷயம் என்று "சப்பாக்' படத்தின் இயக்குநரே மவுனம் கலைக்கவேண்டிய கட்டாயம் உருவானது.
இதுமட்டுமா, தீபிகா வருகிற விளம்பரப் படங்களின் பிராண்டுகள் எதையும் இனி வாங்கப் போவதில்லை என்று ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் எக்செல்-க்கு பதிலாக சர்ஃப் எக்செல்-க்கும், ஸ்நாப்-சாட்டுக்கு பதிலாக ஸ்நாப்டீலுக்கும் கூகுள் ப்ளே ஸ்டோரில் குறைவான ரேட்டிங் கொடுத்த கூட்டம் தான் இவர்கள் என்றாலும், தீபிகாவை தங்கள் பிராண்டு விளம்பரப் படத்தில் பயன் படுத்த தயங்கவே செய்கின்றன நிறுவனங்கள். ஒரே நாளில் 11 மணிநேரத்துக்கும் மேலாக, தீபிகாவின் விளம்பரப் படங்கள் டிவியில் வந்த செய்தியெல்லாம் உண்டு.