"ஜி.வி. பிரகாஷுக்கு என்னாச்சு? என கடந்த இதழுக்கு கவர் ஸ்டோரி எழுதியிருந்தோம். இவர் கையில இத்தனை படங்களா என கோலிவுட் ஏரியாவில் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள், படித்தார்கள்.

Advertisment

gvprakash

சில டைரக்டர்களும் இத்தனை படங்களை கையில வச்சிருந்தா, அத்தனை படத்தின் தயாரிப்பாளர்களின் பாடு என்னாவது என யோசித்திருக்கிறார்கள். இத்தனை படம் இருந்தும் பொங்கலுக்கு ஒரு படமும் வரலேயே என்ற ஏக்கம் ஜி.வி.பிரகாஷுக்கு. சரி போனது போகட்டும், இனிமே நடப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த மாதக்கடைசியில் "ஐங்கரன்' பிப்.14-ஆம் தேதி "100% காதல்' பட ரிலீஸ் வேலைகளில் மும்முரமாகிவிட்டாராம் ஜி.வி.பிரகாஷ்.