ஐஸ்வர்யா ராஜேஷ் எங்கேயோ போய்க்கிட்டிருக்காங்க என்கிறார்கள் கோலிலிவுட் ஆட்கள்.
லேட்டஸ்ட்டா "சாமி-2' படத்தில் விக்ரமுக்கு ஜோடியா ஒப்பந்தம் ஆகியிருப்பதைச் சொல்கிறார்கள். "சாமி-2' படத்தில் விக்ரமின் ம
ஐஸ்வர்யா ராஜேஷ் எங்கேயோ போய்க்கிட்டிருக்காங்க என்கிறார்கள் கோலிலிவுட் ஆட்கள்.
லேட்டஸ்ட்டா "சாமி-2' படத்தில் விக்ரமுக்கு ஜோடியா ஒப்பந்தம் ஆகியிருப்பதைச் சொல்கிறார்கள். "சாமி-2' படத்தில் விக்ரமின் மனைவியாக த்ரிஷாவுக்குப் பதிலாக இவர்தான் நடிக்கப் போகிறார்.
ஏற்கெனவே கவுதம் மேனனின் "துருவநட்சத்திரம்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் இவருக்கு, இன்னொரு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய சந்தோஷம் என்கிறார்.
"செக்கச் சிவந்த வானம்' படத்தில் மணிரத்னம் டைரக்ஷனில் நடிக்கிறார். ஒன்று அல்லது இரண்டு டேக்கில் சிறப்பாக நடிப்பதைப் பார்த்து மணிரத்னம் பாராட்டினாராம்.
அதைப் பெருமையாகச் சொல்கிறார் ஐஸ். "கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவும், "துருவநட்சத்திரம்' படத்தில் பத்திரிகையாளராகவும் பலதரப்பட்ட கேரக்டர்கள் கைவசம் வைத்திருக்கும் ஐஸ், குளிர்ச்சியில் இருக்கிறார்.
"சாமி-2'-ல் விக்ரம்- ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட சீன்களையும் பாடல் காட்சி களையும் பழனியைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் படமாக்கி வருகிறார் டைரக்டர் ஹரி. படத்தை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார் தமீன் பிலிம்ஸ் ஷிபு தமீன்.