மலாபாலுக்கு இந்த 2020 வருடத்தில் எதிர்பார்ப்புமிக்க பல புதுமை யான படங்கள் வரிசையில் இருக்கிறது.

Advertisment

அவரது நடிப்பில்"அதோ அந்த பறவை போல' படம் எதிர்பார்ப்புமிக்க படைப்பாக, வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்தநிலையில் அவரது திறமைக்கு அடையாளமாக, தற்போது அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குநர் மகேஷ் பட் உருவாக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகி வேடமேற்கிறார் நடிகை அமலாபால்.

Advertisment

இதுகுறித்து அமலாபால் பேசும்போது...

""சில ஆச்சரியங்கள் அறிவிப்பின்றி வாழ்க்கையில் வந்துவிடும்.

mm

அப்படியானதுதான் இயக்குநர் மகேஷ் பட்டிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு. அவருடன் வேலை செய்வது தென்னிந்திய நாயகிகள் அனைவருக்கும் ஒரு கனவு. அவர் திரையில் உருவாக்கும் பெண் கதாபாத்திரங்கள் வலுவனாது, உணர்வுப்பூர்வமானது. காலத்தால் அழியாத நிலைத்துநிற்கும் படைப்புகளை தருபவர் அவர். அவரது பட்டறையில் கற்றுக்கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் இத்தொடரின் இயக்குநர் புஷ்ப்தீப் மிகத்திறமையானவர். மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர். திரையில் என்ன வரவேண்டும், அதை எப்படி கொண்டுவர வேண்டும் என்பதில் மிகத்தெளிவானவராக உள்ளார்.

அவரது திரைக்கதையைப் படித்தபிறகு, இந்த தொடர் ஒரு அற்புதமான படைப் பாக வரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த இணையத்தொடர் 1970-களில் வெற்றிக்கு போராடும் இயக்குநருக்கும், பிரபலமாக இருக்கும் நடிகைக் கும் இடையே உள்ள உறவைச் சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து பிரபல நாயகிகளையும் பரிசீலித்தபின் என்னை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளனர். வட இந்தியப் பெண்ணாக நடை, உடை, பாவனை, பேச்சு மொழி என மூன்று மாதங்கள் மேற்கொண்டு இறுதியாகவே இந்தக் கதாபாத்திரத்திற்கு தயாராகியுள்ளேன்'' என்கிறார் உற்சாகமாக.