"தர்மபிரபு', "கூர்கா', "ஜாம்பி' ஆகிய படங் களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு' எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. அவரோடு இமான் அண்ணாச்சி மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Advertisment

cc

இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு "சர்வர் சுந்தரம்' படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபு விற்கு இந்த "பட்லர் பாலு' படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற- சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபு வின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள்.

Advertisment

அதனால் போலீஸ் அவரை கைது செய்து விடுகிறது. போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை கலகல காமெடி கலந்த திரைக் கதையாக "பட்லர் பாலு' படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சுதிர். எம்.எல். ஒளிப்பதிவு- பால் லிவிங்க்ஸ்டன், இசை- கணேஷ் ராகவேந்திரா, வசனம்- எஸ்.பி. ராஜ் குமார், தயாரிப்பு- தோழா சினி கிரியேஷன் கிருத்திகா.

படத்தை முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர் 8-ஆம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்கு களில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

Advertisment