Advertisment

கோலிவுட்டை கலக்கும் காம்பியரிங் கேர்ள்ஸ்!

/idhalgal/cinikkuttu/combiring-girls

மிழ் சினிமாவின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்கள், படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சிகள் முக்கால்வாசி சென்னை சாலிலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் லேப் தியேட்டரில்தான் நடக்கும். ஒருசில விழாக்கள் மட்டும் நுங்கம்பாக்கத்திலுள்ள நடிகை லிலிசிக்குச் சொந்தமான லீ மேஜிக் லேண்டர்ன் தியேட்டரில் நடக்கும். லிலிசியின் தியேட்டரைவிட பிரசாத்லேப் தியேட்டரை பெரும்பாலான தயாரிப்பாளர்களும் நட்சத் திரங்களும் விரும்புவதற்கு காரணம், காம்பவுண்டுக் குள்ளேயே பரந்து விரிந்திருக்கும் பார்க்கிங் வசதிதான்.

Advertisment

aa

அந்த இரு தியேட்டர்கள்போக, ரஜினி, கமல், அஜீத், விஜய் (இதில் அஜீத் அவரது பட விழாக்களுக்கே வரமாட்டார் என்பது வேறு விஷயம்) போன்ற பெரிய நடிகர்கள் படங்களின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடல், நேரு ஸ்டேடியம், தனியார் கல்லூரியின் பெரிய அரங் கங்கம் ஆகியவற்றில் நடக்கும்.

சூர்யா, கார்த்தி ஆகியோர் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விழாக்களை நடத்துவார்கள்.

Advertisment

aa

சின்ன பட்ஜெட் படங்கள் என்றால், அந்தப் படங்களின் பி.ஆர்.ஓ.க்

மிழ் சினிமாவின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்கள், படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சிகள் முக்கால்வாசி சென்னை சாலிலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் லேப் தியேட்டரில்தான் நடக்கும். ஒருசில விழாக்கள் மட்டும் நுங்கம்பாக்கத்திலுள்ள நடிகை லிலிசிக்குச் சொந்தமான லீ மேஜிக் லேண்டர்ன் தியேட்டரில் நடக்கும். லிலிசியின் தியேட்டரைவிட பிரசாத்லேப் தியேட்டரை பெரும்பாலான தயாரிப்பாளர்களும் நட்சத் திரங்களும் விரும்புவதற்கு காரணம், காம்பவுண்டுக் குள்ளேயே பரந்து விரிந்திருக்கும் பார்க்கிங் வசதிதான்.

Advertisment

aa

அந்த இரு தியேட்டர்கள்போக, ரஜினி, கமல், அஜீத், விஜய் (இதில் அஜீத் அவரது பட விழாக்களுக்கே வரமாட்டார் என்பது வேறு விஷயம்) போன்ற பெரிய நடிகர்கள் படங்களின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடல், நேரு ஸ்டேடியம், தனியார் கல்லூரியின் பெரிய அரங் கங்கம் ஆகியவற்றில் நடக்கும்.

சூர்யா, கார்த்தி ஆகியோர் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விழாக்களை நடத்துவார்கள்.

Advertisment

aa

சின்ன பட்ஜெட் படங்கள் என்றால், அந்தப் படங்களின் பி.ஆர்.ஓ.க்களே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங் குவார்கள். அதிலும் பி.ஆர்.ஓ. நிகில் முருகன் தொகுத்து வழங் குவதில் தனி ஸ்டைலே வைத்துள் ளார். சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப் பாளர், டைரக்டர், ஹீரோ, ஹீரோயின், டெக்னீஷியன்கள், பத்திரிகையாளர்கள் என எல்லாரும் வந்தபின் மைக்கப் பிடிப்பார் நிகில் முருகன். "இன்ன கம்பெனி, ""இன்ன படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணை யதள நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இப்போது ஆடியோ மற்றும் டீசர் லைட்ஸ் ஆஃப்...'' என்றதும் ஸ்கிரீனில் டீசர் ஓடிமுடித்து, தியேட்டரில் லைட்டைப் போடுவார்கள்.

மேடையில் ஏறி, சடசடவென விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர் களையும், படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர், டெக்னீஷியன்களையும் மேடைக்கு அழைப்பார், விழா தொடங்கும். (இந்த சடசடப்புக்கெல்லாம் முன்பாக டங்ஜிக் டங்ஜிக் என்ற பேக்ர வுண்ட் மியூசிக்குடன் "உங்களில் நான் உங்களால் நான்' என்ற வாசகத்துடனும் பளீர் சிரிப்புடனும் ஸ்கிரீனில் தோன்றி பகீர் கிளப்புவார் நிகில் முருகன்.) அதேநேரம், எந்த இடத்தில் விழா நடந்தாலும் சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோயின் வராத குறையைப் போக்கி, ஃபங்ஷனை கலகலப்பாகவும் கலர்ஃ புல்லாகவும் கொண்டுபோய் கலக்கி எடுத்து வருபவர்கள் காம்பியரிங் கேர்ள்ஸ்தான்.

aa

aa

அப்படிப்பட்ட காம்பியரிங் கேர்ள்ஸ் சிலரப்பத்தி தெரிஞ்சுக் கிட்டோம்னா... நாளப் பின்ன யூஸ்ஃபுல்லா இருக்கும்ல... அதுக்குத் தான் இந்த அரிய அபூர்வ செய்தி!

சன் டி.வி.யில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, இப்போது அதே சன் டி.வி.யில் ஒளிபரப் பாகி, கடந்த ஜனவரி மாதம் முடிந்த குஷ்புவின் "லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியல் மற்றும் பல சீரியல்கள், சினிமாக்களில் நடித்து பிரபலமாகிவரும் நட்சத்திரா முன்னணி காம்பியரிங்காக இருக்கிறார்.

அதே சன் டி.வி.யிலும் ஆதித்யா டி.வி.யிலும் ஆதவனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவரும் தியா மேனனின் காம்பியரிங் ஸ்டைலே தனிதான். இந்த தியா மேனனும் நட்சத்திராவும் பெரும்பாலும் மெகா பட்ஜெட் படங்களின் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்குத்தான் காம்பியரிங் பண்ணுவார்கள்.

சின்ன பட்ஜெட், கொஞ்சம் பெரிய பட்ஜெட் படங்களுக்கென்றே சில காம்பியரிங் இருக்கிறார்கள். ஒரு படத்தின் புரமோ ஃபங்ஷனுக்கு வராமல், அந்தப் படத்தின் ஹீரோயின் டிமிக்கி கொடுப்பார் அல்லது சில ஹீரோயின்களுக்கு வரமுடியாத சூழல் இருக்கும். அப்படிப்பட்ட கஷ்டமான நேரத்தில் கைகொடுப்பது காம்பியரிங் கேர்ள்ஸ்தான்.

ரொம்ப நாளைக்குப் பிறகு நடிகர் பரத்திற்கு சூப்பர் ஹிட்டடித்த "காளிதாஸ்' படக் குழுவினரின் நன்றி சொல்லும் நிகழ்ச்சி பிரசாத் லேப்பில் நடந்தது. படத்தின் ஹீரோ மும்பையிலிருந்து வந்து விட்டார். டைரக்டர் ஸ்ரீசெந்தில் உட்பட டெக்னீஷியன்கள் அனைவருமே ஆஜராகி விட்டார்கள். ஆனால் ஹீரோயின் ஆன் ஷீத்தல் மட்டும் ஆப்சென்டா கிவிட்டார். அந்த ஆன் ஷீத்தல் வராத குறையைப் போக்கியவர் காம்பியரிங் பண்ண வந்த சுமையா கவுசர்தான். சுமை யாவுக்கு சொந்த ஊர் வாணியம் பாடிதான் என்றாலும், சென்னை யிலேயே செட்டிலாகிவிட்டது அவரது குடும்பம். கலைஞர் டி.வி.யில் காலை நேர நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்கும் சுமையாவின் காம்பியரிங் எப்போதுமே சுகமாகத்தான் இருக்கும். கடந்த 16-ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடந்த "மரிஜுவானா' படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில்கூட கலக்கலாக காம்பியரிங் பண்ணினார் சுமையா.

nn

இதற்கடுத்து காம்பியரிங் ரேசில் இருப்பவர் சரினா. "டோலா' படத்தின் டீசர் வெளி யீட்டு விழாவுக்கு படத்தின் ஹீரோயின் பிரேர்னா ஆஜரா கியிருந்தாலும், காம்பியரிங் சரினா செம ஜிலுஜிலுப்பாக வந்து கலக்கி எடுத்தார். "ஹீரோயின் பெயர் தெரியா மலேயே மொத்த படத்துலயும் நடிச்சு முடிச்ச ஹீரோ நீங்க ஒருத்தராத்தான் இருக்க முடியும்' என ஹீரோ ரிஷி ரித்விக் கைப் பார்த்துச் சொல்லிலி விழாவைக் கலகலப்பாக் கினார் சரினா. ஜி.டி.வி.யில் தொகுப்பாளினியாக இருக்கும் இந்த சரினா, டி.வி. சீரியல்களிலும் பிஸியாக நடித்துவருகிறார்.

ஆதித்யா டி.வி.யில் தொகுப்பாளினி, சினிமாவில் நடிப்பு, ஃபங்ஷன் காம்பியரிங் என மூன்று ஏரியாக்களிலும் ரவுண்ட் கட்டி அடிப்பவர் அகல்யா. "தேவராட்டம்', "ராட்சசி', "சங்கத் தமிழன்' போன்ற படங்களில் நடித்தவர் அகல்யா. இப்போது விவேக்குடன் ஒரு படத்திலும்' பஞ்சு சுப்புவுடன் ஒரு படத்திலும், மேலும் சில படங்களிலும் செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் அகல்யா. ஆதித்யா டி.வி.யில் "சொல்லுங்க டியூட்' டை... செமபியூட்டியாக வழங்கும் அகல்யா, காம் பியரிங்கிலும் அசத்திவருகிறார்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

cini030320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe