பேராசையும் பணத்தாசையும் பிடித்து ஆட்டும் மயில்சாமி, தனது மகனுக்கு பெரிய இடத்துப் பெண்ணைத்தான் கட்டிவைக்க வேண்டும் என்பதற்காக படாதபாடுபடுகிறார். அவர் படும்பாட்டை சரவெடி காமெடிமூலம் சொல்ல வருவதுதான் "காசு மேலே காசு வந்து'. ராகவ் மூவி எண்டர் டெய்ன்மெண்ட் பேனரில் பி.ஹரிகரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தயாரிப்பில் கதை-திரைக்கதை- வசனம் எழுதி இயக்குகிறார் கே.எஸ்.பழனி. "மன்னார் வளைகுடா', "இன்னுமா நம்மள நம்புறாங்க', "கண்டேன் காதல் கொண்டேன்' படங்களின் வசனகர்த்தாவாக இருந்து டைரக்டராக புரமோஷன் ஆகியிருக்கிறார் கே.எஸ்.பழனி.
படம் முழுக்கவரும் வெயிட்டான ரோலிலில் மயில்சாமி, ஹீரோவாக ஷாருக், ஹீரோயினாக காயத்ரி, மற்ற கேரக்டர்களில் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு சுரேஷ் தேவன், பாடல்கள் கருப்பையா, இசை பாண்டியன். சென்னை, பாண்டிச்சேரி, மகாபலிலிபுரம், கீழ்க்கட்டளை ஏரியாக்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/gayathiri-n.jpg)