Advertisment

ஒரு குரூப்பாத்தாய்யா அலையுறாயங்க

/idhalgal/cinikkuttu/clump-blood-clothed

சில மாதங்களுக்குமுன்பு கணக்கு டீச்சர் ஒருவர் பாடம் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஸ்லீவ்லெஸ், குட்டைப் பாவாடை அணிந்திருக்கும் அந்த டீச்சர், சிக்கென்று இருப்பதால் சில மணிநேரங்களில் பல பத்தாயிரங்களைக் கடந்தும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தார். இத்தனை அழகான டீச்சரா? அதுவும் கணக்குப் பாடம் எடுப்பாரா? இப்படி ஒருவர் இருந்திருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலு

சில மாதங்களுக்குமுன்பு கணக்கு டீச்சர் ஒருவர் பாடம் எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஸ்லீவ்லெஸ், குட்டைப் பாவாடை அணிந்திருக்கும் அந்த டீச்சர், சிக்கென்று இருப்பதால் சில மணிநேரங்களில் பல பத்தாயிரங்களைக் கடந்தும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தார். இத்தனை அழகான டீச்சரா? அதுவும் கணக்குப் பாடம் எடுப்பாரா? இப்படி ஒருவர் இருந்திருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஃபெயிலாகி நாங்க கணக்கு படிச்சிருப்போமே என வழிந்து தள்ளினார்கள் வீடியோவைப் பார்த்தவர்கள்.

Advertisment

group

அந்த டீச்சரின் பெயர் ஓக்சனா நீவிசெலியா. ஐரோப்பிய நாடான பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கைச் சேர்ந்தவர்தான் இவர். இதைத் தேடிக் கண்டுபிடித்த திடீர் ரசிக சிகாமணிகள், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்தும் கமெண்டுகளைக் குவித்துக் கொண்டிருந்தனர். சில நாட்களிலேயே பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு கணக்கு டீச்சர் ஆனார் ஓக்சனா.

இதையெல்லாம் பார்த்து அசந்துபோன ஓக்சனா, அடேய் அந்த வீடியோவுல இருக்கிறது நானில்லைடா. நல்லா பாருங்க! எனக்கு வயது 19 தான் ஆகுது. இன்னும் காலேஜே முடிக்காதவ நானு. கணக்குல பெரிய மக்கு வேற.. என்னைய போயி கணக்கு டீச்சர் னெல்லாம் கௌப்பி விட்டுட்டீங்களே என கெஞ்சிப் பார்த்தார். ஆனால், கணக்கு கற்றுக் கொள்ளும் ரசிகர்களின் ஆர்வத்தால், ஓக்சனாவின் விளக்கங்கள் எந்த மூலைக்குப் போனதோ தெரிய வில்லை. ரொம்ப முக்கியமானது என்னவென்றால், ஓக்சனா மெக்கானிக் கல் என்ஜினீயரிங்கில் முனைவர் பட்டம் முடித்தவர் என்று கிளப்பிவிட்டதுதான்.

Advertisment

group

அட போங்கடா! என களைத்துப்போன ஓக்சனா, ரசிகர்களின் வேகத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள கவர்ச்சி தூக்கலான பிகினி படங்களைப் பதிவிடத் தொடங்கினார். இன்றைய தேதியில் ஏழேகால் லட்சம் பேர் ஓக்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்கின்றனர்.

"உலகிலேயே கவர்ச்சியான கணக்கு டீச்சர் இவர்தான்' என மீடியாக்கள் தலையில் தூக்கி கொண்டாடின.

அர்மானி நிறுவனம் பிகினி படங்களுக்காக ஓக்சனாவை ஒப்பந்தம் செய்து, பிரபல மும் ஆக்கிவிட்டது. ஆனா லும், அந்த கணக்கு டீச்சர் ரூமர்களை இன்றும் வெளிப் படையாக மறுத்துவருகிறார் ஓக்சனா. அதேசமயம், வீடியோவில் இருந்த உண்மையான கணக்கு டீச்சர் யார் என்பதே இன்று வரைக்கும் தெரியவில்லை.

-மதி

cine050319
இதையும் படியுங்கள்
Subscribe